India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், தேன்கனிக்கோட்டை, நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ.28,51,20,000 மதிப்புள்ள கற்களும், பேளாராள்ளி பட்டாளம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ரூ.170,14,08000 ஆயிரம் மதிப்புள்ள கற்களும் திருடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்காக 165 கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இம்முயற்சியை கைவிடவும் மேலும் தொளுவபெட்டா, குள்ளட்டி பகுதிகளுக்கு தார் சாலை அமைத்திடவும் தேன்கனிக்கோட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நாளை காலை 10 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 16.5 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் செல்போன் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று(21.07.2024) முதல் 24ஆம் தேதி வரை இராயக்கோட்டை மேம்பாலம் அருகில் ஜெயவிலாஸ் உணவகம் முதல்மாடியில் நேர்காணல் நடைபெறுகிறது.12ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை படித்தோர் சான்றிதழுடன் வரலாம். தொடர்புக்கு 9840909834, 9840903962, 8608363404
சின்ன பர்கூரை சேர்ந்தவர் கல் உடைக்கும் தொழிலாளி ரமேஷ்-க்கு (45) மனைவி உஷா, நிவேதா, ஷர்மிளா என 2 மகள்கள் உள்ளனர். கடன் பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று மனமுடைந்த உஷா, தனது இரு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து பர்கூர் போலீசாரின் விசாரணையில் மனைவி,மகள்களை தற்கொலைக் தூண்டியதாக கணவன் ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
அஞ்செட்டி சேசுராஜபுரத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை புதிரி, தாய் கோவிந்தம்மாள், மகன் ஐயன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 7 லிட்டர் சாராயம், அதை தயாரிக்க வைத்திருந்த பொருட்களை இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்தனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.சாந்தி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், காரகுப்பம் ஊராட்சி கொல்லப்பள்ளி இருளர் காலனியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் உற்பத்தி குழுவின் புளி சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. இன்று 2திறந்து வைத்து தளவாட பொருட்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் தலைமையில் ஓசூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 23ஆம் தேதி அன்று ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இலவச மின்சாரம் பெற 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிருஷ்ணகிரி பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலமங்கலத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக வெங்கடேசன் என்பவரிடம் 10,000 ரூபாயை லஞ்சமாக பெற்ற தென்னரசு எனும் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
Sorry, no posts matched your criteria.