India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேசத்திலிருந்து பலத்த ராணுவப் பாதுகாப்புடன் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனா் . இதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த பிரீதா ஸ்ரீநிதி, ஆலம்பட்டியை தக்சண்யா உள்பட 12 பேர் மீட்கப்பட்டனர். தமிழகத்தை சோ்ந்த 49 மாணவ மாணவிகள் தமிழக அரசின் நடவடிக்கையால் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கத்கது .
ஒசூா் மாநகராட்சியில் கடும் குடிநீா் பிரச்னை இருந்து வந்த நிலையில் அதற்கு தீா்வு காண எந்தவித நடவடிக்கையும் ஆணையா் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தலைமை செயலகத்தில் அவர் மீது புகார் மனு அனுப்பியிருந்த நிலையில்
ஒசூா் மாநகராட்சி ஆணையா் தி.சிநேகா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக ஒசூா் ஆணையராக சென்னை, முதன்மை இணை தோ்தல் அதிகாரியாகப் பணியாற்றிய எச்.எஸ். ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஓசூர் மாநகராட்சி ஆணையாராக ஸ்ரீகாந்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒசூரில் காவேரி மருத்துவமனை சார்பில், தொழிற்நிறுவனங்களுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி அழைப்பாளராக பங்கேற்று அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார். பின்னர் பேசிய அவர் அணியின் தேர்வு என்பது நம் கையில் இல்லை என்றார். நட்ராஜ், கெயிக்வாட் இருவரும் திறமையால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பார் என்றார்.
2023-24ஆம் கல்வி ஆண்டில் 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்களில் மொத்தம் 764 பேர் இந்த தேர்வினை எழுதினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் 90 செ.மீ. முதல் 108 செ.மீ. வரையிலான ஆழத்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆள்களின் பெயா் இடம் பெற்றுள்ளன. மேலும், ஒரு பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊா் பெயா் கிடைத்துள்ளது சிறப்பானது கருதப்படுகிறது என தொல்லியல் துறையினா் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், தேன்கனிக்கோட்டை, நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ.28,51,20,000 மதிப்புள்ள கற்களும், பேளாராள்ளி பட்டாளம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ரூ.170,14,08000 ஆயிரம் மதிப்புள்ள கற்களும் திருடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்காக 165 கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இம்முயற்சியை கைவிடவும் மேலும் தொளுவபெட்டா, குள்ளட்டி பகுதிகளுக்கு தார் சாலை அமைத்திடவும் தேன்கனிக்கோட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நாளை காலை 10 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 16.5 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் செல்போன் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று(21.07.2024) முதல் 24ஆம் தேதி வரை இராயக்கோட்டை மேம்பாலம் அருகில் ஜெயவிலாஸ் உணவகம் முதல்மாடியில் நேர்காணல் நடைபெறுகிறது.12ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை படித்தோர் சான்றிதழுடன் வரலாம். தொடர்புக்கு 9840909834, 9840903962, 8608363404
Sorry, no posts matched your criteria.