India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் ராயக்கோட்டை மேம்பாலம் எதிரே உள்ள விநாயகா ஹாலில் ஒருங்கிணைந்த மாவட்ட பொருப்பாளர் நெப்போலியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் திருமால்வளவன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணி குறித்து பேசினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த 80 ஆண்டுகளாக ரயில் நிலையமே கிடையாது. சுற்றுவட்டாரத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கிரானைட் தொழிற்சாலை, கால்நடைச் சந்தை அதிக அளவில் உள்ளது. இவை அனைத்தையும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றுமதி செய்ய, சாலைப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. ரயில் போக்குவரத்தை பயன்படுத்தினால் குறைந்த செலவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும்.
கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளா்களை சந்தித்த
அதிமுக துணை பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி எம்எல்வுமான கே.பி.முனுசாமி மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆந்திரம், பீகாருக்கு மட்டுமே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் பிரதமரும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும் மத்திய நிதி அமைச்சருக்கு சாமானிய மக்களின் கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை என்றும் சாடினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு முகவர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் வரும் 26ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நுகர்வோர்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
திமுக அரசு மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கழக துணை பொதுச்செயலாளர் முனுசாமி அவர்கள் துவக்கி வைத்து பேசினார். கிழக்கு மாவட்ட செயலாளர்
அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு 2023-24ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை தணிக்கை மேற்கொள்வதற்கு பட்டய கணக்காளர்களிடமிருந்து விருப்புரிமை கோரிக்கைகள் வரவேற்க்கபடுகின்றன. விண்ணப்ப படிவங்களின் மாதிரியை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 82 ஆண்டுக்கால தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கையான ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை திட்டம் பற்றி மத்திய பட்ஜெட்டில் இந்த முறையும் எந்த அறிவிப்பும் இல்லாததால் வணிகர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்து இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையாக உள்ள ரயில் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாக வேண்டும், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும், மாம்பழச்சாறு குளிர்விக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கப்பட வேண்டும் போன்றவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
கிருஷ்ணகிரி மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த TN-
24-A-6919 Bolero LX வாகனம் ஜூலை 29ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 132 இல் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூலை 26ஆம் தேதிக்குள் ரூ. 5000 வைப்பு செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84 ஆயிரத்து 305 மதிப்பில் சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள், பிரைலி வாட்ச்கள் மற்றும் ஊன்று கோல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.