Krishnagiri

News March 2, 2026

கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

கிருஷ்ணகிரியில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்!

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தளி தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்க்கரசன் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை தீவிர படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

News March 2, 2026

ஓசூர்: கடத்தலில் ஈடுபட்ட போலீஸ்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று (மார்ச் 1) சிப்காட் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் 528 கர்நாடக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த நாகரசம்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் நாகராஜ் (41) என்பவரை போலீஸார் கைது செய்தனர். சட்டவிரோத விற்பனைக்காக மது கடத்திய அவர் மீது, தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

கிருஷ்ணகிரி: ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த இளைஞர்!

image

தேன்கனிகோட்டை அருகே கோட்டைவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜிபிசன். இவர் மத்திகிரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று முன்தினம் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஜெபிசன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 2, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (01.03.2026) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பதங்கள் ஏற்படாத உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

கிருஷ்ணகிரி: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். இதன்படி <>இந்த<<>> ஒரே இணையதளத்தில் அனைத்திற்கு விண்ணப்பித்து கொள்ளலாம். *மறக்காம நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News March 1, 2026

கிருஷ்ணகிரி மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

image

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

கிருஷ்ணகிரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News March 1, 2026

கிருஷ்ணகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

ஓசூர்: சாதனைகளை அள்ளி தெளித்த MLA!

image

ஒசூா்: திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ”ஒசூரில் ரூ.100 கோடியில் தலைமை மருத்துவமனை, ரூ.550 கோடியில் சாக்கடை திட்டம், ரூ.50 கோடியில் பேருந்து நிலையம், ரூ.250 கோடியில் சாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயா்த்தியது உள்ளிட்ட ரூ.3000 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன” எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!