Krishnagiri

News September 13, 2024

ராயக்கோட்டை அருகே விபத்தில் பெண் பலி

image

சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணூரம்மாள்(28). சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மாள்(24). இவர்கள் இருவரும் ராயக்கோட்டை அருகே உள்ள டாடா எலெக்ட்ரானிக் கம்பெனியில் செக்குரிட்டியாக வேலை செய்து வந்தனர். இன்று அதிகாலை ஸ்கூட்டரில் வேலைக்கு சென்ற 2 பேரும் சாலை சென்டர் மீடியனில் மோதி விழுந்ததில் கண்ணூரம்மாள் பலியானார். தொடர்ந்து மாதம்மள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 13, 2024

ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது RGBSI

image

மிச்சிகன் மாகாணம் ட்ராயில் RGBSI நிறுவனத்துடன் ரூ. 100 கோடி முதலீட்டுக்கு தமிழ்நாடு அரசானது புரிந்துணர்வு ஒப்பத்தம் செய்துள்ளது. எனவே ஒசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாட்டிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, முதல்வர் அமெரிக்க சென்றுள்ள நிலையில் இந்த ஒப்பந்தமானது அவரின் முன்னிலையில் கையெழுத்தானது.

News September 13, 2024

கிருஷ்ணகிரி வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

image

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

News September 12, 2024

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நாளை ஆரம்பம்

image

கிருஷ்ணகிரியில் 30ஆவது மாங்கனி கண்காட்சி இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவை திரும்பப் பெறப்பட்டது. எனவே திட்டமிட்டப்படி நாளை மாங்கனி கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கான வேலைகள் முழுமை பெறாத நிலை இருப்பதால் மாலை 3 மணிக்கு கண்காட்சி தொடங்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி மீண்டும் ஒத்திவைப்பு

image

கிருஷ்ணகிரியில் 30 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை 13.09.2024 முதல் தொடங்கி 28 நாட்களுக்கு நடைபெற இருந்த நிலையில் இன்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் அரங்கமைப்பு பணிகளை பார்வையிட்டனர். இந்நிலையில் பணிகள் இன்னும் முழுமை பெறாத காரணத்தால் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மாங்கனி கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

கிருஷ்ணகிரியில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி

image

கிருஷ்ணகிரியில் இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்தில் மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய ஆண் பெண் இருபாலருக்குமான 13 நாட்களுக்கு CCTV கேமரா பொருத்துதல் பயிற்சியும், பெண்களுக்கு மட்டுமான 30 நாட்களுக்கு தையல் பயிற்சியும் துவங்கியுள்ளது. பயிற்சியில் இணைந்து கொள்ள வரும் செப்.14 ஆம் தேதி கடைசி நாள் என பயிற்சி நிறுவன இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

கிருஷ்ணகிரியில் ரூ.500 கோடியில் ஒப்பந்தம்

image

அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் கட்டுமான கருவி உற்பத்தி நிலையங்களை ரூ.500 கோடியில் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 12, 2024

கிருஷ்ணகிரியில் கல்லூரி செல்லா மாணவர்களுக்கு விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரியில் பிளஸ்-2 முடித்து இன்னும் உயர்கல்விக்கு செல்லாத 1,200 மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்காக மேலும் 2 இடங்களில் கூடுதலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓசூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

News September 11, 2024

கிருஷ்ணகிரி அருகே இருவர் சஸ்பெண்ட்; ஆட்சியர் உத்தரவு

image

தேன்கனிக்கோட்டை வட்டம் வானமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மது என்பவரின் மூன்று வயது மகள் சசிகலா, அங்கன்வாடி மையத்தில் பயின்ற நிலையில் குழந்தையின் மீது கார் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக அங்கன்வாடி மைய கண்காணிப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகிய இருவரும் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக பணியிடை நீக்கம் செய்து நேற்று ஆட்சியர் சரயு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 10, 2024

விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 2024-2025 -ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (10.09.2024) துவக்கி வைத்தார். உடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ராஜகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

error: Content is protected !!