India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் (PUPS) விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் தைக்கப்பட்டுள்ள முதல் இணை சீருடைகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர், தாசில்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக முழுவதும் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி மற்றும் கிட்டம்பட்டி மலைப்பகுதியில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி உமா தலைமையில் கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை உட்பட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட முன்னாள் முப்படை மற்றும் துணை இராணுவ படை வீரர்கள், வீரமங்கையர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று கார்கில் போரில் வீரமரணமடைந்த சபியுல்லா அவர்களின் மனைவி முபாரக் அவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
கோவையில் அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம் எனவும், ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் கோபிநாத் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக.கிருஷ்ண மூர்த்தி, நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. அதன்படி விமான நிலையங்கள் அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பரிந்துரையை இந்திய விமான ஆணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இருப்பினும் அந்த இடங்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஓசூர், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு இன்று ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கிறிஸ்துவ தேவாலயங்களி பணியாற்றும் உபதேசியார்கள், வேதியார்கள், பாடகர்கள் , கல்லறை பணியாளர்கள் போன்றோர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதில் சேருவதற்கான விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெற்று விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னாள் முப்படை துணை இராணுவ வீரா்கள் சார்பில் நாளை(ஜூலை 28) 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. இது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆவின் பால் டெய்ரி எதிரில் உள்ள தொன்போஸ்கா மெட்ரிக் பள்ளியில் காலை 10 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இவ்விழாவினை கிருஷ்ணகிரி முன்னாள் துணை இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவான 52 அடிகளில் தற்போது அணை 51அடிகளை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.