India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், கிருஷ்ணகிரியில் 102 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை ஏற்படுத்தி தருவது, தொழில்,விவசாயத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் உயர்கல்வி உறுதி திட்டமான தமிழ்ப்புதல்வன் திட்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நாட்டு நல பணி திட்ட அலுவலர் முனைவர் மா ஜெகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது மாணவர்களுக்கு வங்கி டெபிட் கார்டு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று மாலை (ஆகஸ்ட் 9) சுமார் 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெயர் தெரியாத நபர் நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதினார். இந்த கோர விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசுப் பொறியியல் கல்லூரியில் தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு இன்று வங்கி டெபிட் கார்டுகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்நிகழ்வின்போது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் சரயு, ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் சி.சங்கு. இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியின் தமிழ்நாடு சிறப்பு படையின் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் .
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னதக்கேபள்ளியில் எழுந்தருளியுள்ள நாகம்மன் திருக்கோவிலில் நாக சதுர்த்தியை முன்னிட்டு 16-வது ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் 52 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும் வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (தலைமையிடம்) பணியாற்றி வந்த விவேகானந்தன் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக கே.சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அவர், தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலையில், சுமார் ரூ.100 கோடி மதிப்பில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.