Karur

News November 13, 2024

கரூரில் மாரத்தான் போட்டி: துவக்கி வைக்கும் அமைச்சர் 

image

கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியை  அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் நவ.24ஆம் தேதி துவக்கி வைக்கவுள்ளார். மேலும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெரியவர்கள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News November 13, 2024

கரூர் நகரப் பகுதியில் 24.80 மி.மீ மழை

image

கரூர் நகர பகுதியில் நேற்று சுமார் 3 மணி நேரம் (24.80 மி.மீ) கன மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் அங்கு குளிர்ந்த ஈரப்பதம் நிலவியது. தற்போது இந்த மழையினால் அப்பகுதியில் நல்ல குளிர்ச்சியான சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 13, 2024

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நவ.15ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 9499055912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

கரூர்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை ➤தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ➤கரூர் மாவட்டத்தில் வெங்காய விலை உயர்வு ➤ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம் ➤கரூர் மாவட்டத்தில் சாரல் மழை ➤கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் ➤வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

News November 12, 2024

கரூர் மாவட்டத்தில் வெங்காய விலை உயர்வு

image

கரூர் மாவட்டத்திற்கு பெரிய வெங்காயம் கர்நாடக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் அந்த மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. நேற்று உழவர் சந்தையில் 1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது. 2ஆம் தரம் 70ரூபாயில் விற்கப்பட்டது.

News November 12, 2024

கரூர் மாவட்டத்தில் சாரல் மழை 

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகியபகுதிகளில் இன்று லேசான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News November 12, 2024

கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

image

மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (13.11.24) கோழி வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 04324-294335, 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம் மேலும் நாளை காலை, 10:30 மணிக்கு பயிற்சி மைய வளாகத்துக்கு வர வேண்டும் என பயிற்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

கரூர்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கரூரில் 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு ➤2026இல் பலமான கூட்டணி அமைச்சர் பேச்சு ➤மக்களிடம் மனு பெற்ற கலெக்டர் ➤108 ஆம்புலன்ஸில் வேலைவாய்ப்பு ➤நாளை கரூர் பகுதியில் மின்தடை ➤தவெக சார்பில் கொடியேற்றும் நிகழ்வு ➤அடிக்கடி ஸ்தம்பிக்கும் கரூர்.

News November 11, 2024

கரூர்: 2026இல் பலமான கூட்டணி அமைச்சர் பேச்சு 

image

கரூர் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் திருவிக தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கடந்த எம்.பி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே போட்டியிருந்ததால் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் பலமான கூட்டணியை இபிஎஸ் அமைப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

News November 11, 2024

கரூரில் மனு பெற்ற கலெக்டர் 

image

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (11.11.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் சில மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது. 

error: Content is protected !!