Karur

News April 7, 2024

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா தொண்டமாங்கினம் அடுத்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பழனியம்மாள் (36). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மதுவிற்ற பழனியம்மாள் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ஏழு மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

News April 7, 2024

கரூர் தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

image

கரூர் வெங்கமேடைச் சேர்ந்தவர் சூசை கண்ணு(68). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கேஸ் அடுப்பில் உணவு சமைத்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 7, 2024

கரூர்: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரியுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள https://affidavit.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பழைய ஜெயங்கொண்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் வேம்படி மகன் ராஜு (62). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மது விற்ற ராஜூ மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

News April 6, 2024

கரூரில் 41.5 டிகிரியை தொட்டது வெயில்

image

கரூரில் வெப்பம் 41.5 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 6, 2024

கரூரில் வீட்டிலிருந்தே 3323 பேர் வாக்களிக்க ஏற்பாடு

image

கரூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1804 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1429 பேரும் என மொத்தம் 3323 வாக்காளர்கள் வீட்டிலிருந்தே தபால் மூலம் 12d படிவம் பெற்று வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் வாக்களிக்க ஏதுவாக 56 குழுக்கள் நியமிக்கப்பட்டு அஞ்சல் வாக்குகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

News April 6, 2024

கரூர்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

கரூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 92 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 8 வாக்குச்சாவடகள் மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு

image

கரூர் புகலூர் அருகே பொன்னியாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுந்தரி. இவர் சேமங்கி பகுதிக்கு சென்றபோது அவரது மாமா மோட்டார் சைக்கிளை விக்னேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இது குறித்து கேட்ட போது வாக்குவாதம் முற்றி விக்னேஷ் குமார், ரவி, இந்திரா, முனியம்மாள், சத்யா 5 பேரும் சுந்தரியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகாரில் வேலாயுதம்பாளையம் போலீசார் 5 பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 5, 2024

கரூர்: ரூ.1,25,000 லட்சம் பறிமுதல்

image

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு சின்னரெட்டிப்பட்டி சுங்கசாவடியில் சோதனையில் ஈடுபட்டனர். தோஸ்த் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1,25,000 திண்டுக்கல் மாவட்டம், சிறங்காட்டுப்பட்டி , கோசுகுறிச்சி, கிழக்கு தெரு என்ற முகவரியை சேர்ந்த ஜமால்முகமது என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.