Karur

News April 18, 2024

கரூர்: நேற்றைய வெப்ப நிலவரம்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுவதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 17, 2024

கரூர்: பெண் மாயம் – அண்ணன் புகார்

image

குளித்தலை, வடவம்பாடி ஊராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர்(29), லாரி டிரைவர். இவரது தங்கை விண்மணி(22). கரூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வழக்கம் போல் காலை, 8:00 மணிக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேகர் கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 17, 2024

கரூர்: 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

image

கரூர் மக்களவைத் தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு, இன்று முதல் 19 ஆம் தேதி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4, மகாவீர் ஜெயந்தியான ஏப்., 21, உழைப்பாளர் தினமான மே 1- ஆகிய ஆறு நாட்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

திரைப்பட இயக்குனர் வாக்கு சேகரிப்பு

image

கடவூர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கை சின்னத்திற்கு நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், நாட்டைக் காப்பாற்ற I.N.D.I.A கூட்டணி வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார். உடன் எம்எல்ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் இருந்தனர்.

News April 15, 2024

தூங்கிக் கொண்டிருந்த மகள் மாயம், தாயார் புகார்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், மகள் திருப்பாவை (16). வழக்கம் போல் இரவில் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது திருப்பாவை மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் திருப்பாவை தாயார் சுதா புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 15, 2024

நிலப் பிரச்சனையில் தாக்குதல், 2 பேர் மீது வழக்கு

image

கரூர், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நெப்போலியன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகாசினி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் சுகாசினி மற்றும் கிருஷ்ணராவ் ஆகியோர் நெப்போலியனை தகாத வார்த்தையால் திட்டி கம்பால் அடித்துள்ளனர். இதுகுறித்து மாயனூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 14, 2024

கரூர்: நாளை சித்திரை திருவிழா கொடியேற்றம்

image

கரூர் மேட்டுத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை 9.15 முதல் 10.15 மணிக்குள் கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. இதில் தினமும் காலையில் பல்லக்கும், மாலையில் சிம்ம வாகனம், வெள்ளி கருட, சேஷ, யானை, கருட, குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2024

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவிப்பு

image

கரூர் புலியூர், எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே மாநகராட்சி மண்டலம் 3-க்கு விநியோகிக்கப்படும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வார்டு எண் 15, 16, 38, 39, 40, 41 மற்றும் 42 பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் ஏற்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தனர்.

News April 13, 2024

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு

image

அரவக்குறிச்சி அடுத்து மணல்மேடு டெக்ஸ் பார்க் அருகே KTPL பெண்கள் விடுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரைப்பெர்ரி தர்சுலி (26) தங்கி வேலை பார்த்தார். இவர் காய்ச்சல் சளி காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 13, 2024

கரூர்: அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று கரூரில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் கரூரில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.