Karur

News April 22, 2024

ஆர்.டி மலையில் சிவன் கோவில் பிரதோஷ வழிபாடு

image

குளித்தலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

News April 21, 2024

தண்ணீர் தொட்டியில் குளித்த மாணவன் உயிரிழப்பு

image

கரூர் தோரணக்கல்பட்டி நேரு நகரைச் சேர்ந்த மனோகரன் மகன் மிதுன்(17), அரசு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் கே.எம்.புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் குளித்தபோது, இரும்பு குழாயில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் விசாரிக்கின்றனர்

News April 21, 2024

கிருஷ்ணராயபுரம்: சிறுவன் மாயம் – போலீசார் விசாரணை

image

கரூர், கிருஷ்ணராயபுரம் தாலுகா கீழடை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து, மனைவி இளஞ்சியம். இவர்களின் 14 வயது பேரன் தீபக் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தீபக் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2024

கரூர்: வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு சீல்

image

கரூர் மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், தேர்தல் பொது பார்வையாளர் அசோக் ரெக்காவர் முன்னிலையில் தளவாய் பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டது. மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 20, 2024

கரூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது

image

கரூர், பால்வார்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி, மனைவி கஸ்தூரி(65). இவர் ஆட்டையாம்பரப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, ஆண்டாங்கோவில் செட்டிபாளையம் காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் (26) எனபவர் கஸ்தூரி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரில் நேற்று தான்தோன்றி மலை போலீஸார் முத்துக்குமாரை கைது செய்தனர்.

News April 20, 2024

கரூர்; மொத்த வாக்குகள் நிலவரம்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று கரூர் மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இதன்படி 12 மணி நிலவரப்படி மொத்தமாக 78.61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 19, 2024

கரூரில் 28.88% சதவீதம் வாக்கு பதிவு

image

கரூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. இதில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், காலை 11 மணி நிலவரப்படி 28. 88% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News April 19, 2024

கரூர் தொகுதி: 11 மணி நிலவரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் கரூர் தொகுதியில் மட்டும் 28.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 19, 2024

கரூர் தொகுதியில் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர்

image

கரூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர் ஈடுபட உள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் 824 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் 100 பேரும், துணை ராணுவத்தினர் 469 பேரும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் 446 பேரும் ஈடுபட உள்ளனர்.

News April 18, 2024

கரூர்: உங்கள் பெயர் இருக்கா? இல்லையா?

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள <>https://electoralsearch.eci.gov.in<<>> லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.