India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் அருகே,மாயனுார் கதவணைக்கு நேற்று,11,288கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 14,751 கனஅடியாக அதிகரித்தது. அதில்,டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்காக காவிரியாற்றில்13,251கன அடியும்,தென்கரை வாய்க்காலில் 650 கனஅடி தண்ணீரும் கீழ் கட்டளை வாய்க்காலில் 300 கனஅடி தண்ணீரும் புதிய கட்டளை வாய்க்காலில் 350கன அடியும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் 20 கனஅடிநீர் திறப்பு

கரூர் மாவட்டம், கரூர் வட்டம் ( செப்டம்பர் 1) தேதி முதல் கரூரில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி கரூரில் மணவாசி, அரவக்குறிச்சி ஆகிய சுங்க சாவடியில் கட்டணம் உயர்வு அதன்படி வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரூர் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<

கரூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.230 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.2,000 கோடி) மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தியில் உள்ள ஆர்டர்கள் நிறுத்தப்பட்டும், ரத்து செய்யப்பட்டு திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு <

கரூர்: ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
▶️முதலில் <
▶️அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
▶️அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
▶️முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
▶️பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.

கரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.”செல்போன் டவர் அமைக்க இடம் தேவை” என்ற பெயரில் சிலர் குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற சைபர் மோசடிகளில் ஏமாறாதீர்கள். உங்கள் நிலத்தை தரும் முன் சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே சைபர் குற்றம் உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.SHARE பண்ணுங்க

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அரவக்குறிச்சி/ க.பரமத்தி/குளித்தலை/கிருஷ்ணராயபுரம்/கடஆர் ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள ஈப்பு ஓட்டுநர்/பதிவறை எழுத்தர்/அலுவலக உதவியாளர்/இரவுக் காவலர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் SHAREIT

கரூர் மக்களே மழை காலங்களில் பொதுவாக மின் கசிவு, துண்டிப்பு ஏற்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம், உதவும் உள்ளம் கொண்ட கரூர் மக்களே SHARE பண்ணுங்க!

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 3,67,604 தெருநாயால் தாக்கப்பட்டு, அதில் 20 பேர் ரேபீஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் புகார் அளிக்க 04324-260341 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.