India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியானது இன்று தொடங்கியது. வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 526 ஏக்கர் இடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரப்பு இடங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடைகள் ஏடிஎம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது.
கரூர் சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் நலச் சங்கம் நடத்தும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்த முகாமில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அவர்களும், ஆயுர்வேத மருத்துவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கரூர் அருகே மணல்மேடு பகுதியில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார் ஜவுளி நிறுவனத்தில் குடோனில் நேற்று இரவு, 8:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவ தொடங்கியதால் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்த கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும்நன்றி தெரிவிக்கும் வகையில் நாளை கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி – தாந்தோணி ஒன்றியம், உப்பிடமங்கலம் பேரூராட்சி, புலியூர் பேரூராட்சியில் சுற்றுப்பயணம் செல்கின்றார்.
1.போராட்டம் செய்த 33 விசிக வினர் கைது
2.சாலை மறியல் செய்த சேர்மன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு
3.பள்ளி வளாகத்தில் புகுந்து மாணவனை கடித்த வெறி நாய்
4.டீசல் திருடிய 10 பேர் மீது வழக்கு: 1 கார், 520 லிட்டர் டீசல் பறிமுதல்
5.கரூர் அருகே ஆம்னி பேருந்து விபத்து: போக்குவரத்து நெரிசல்
சம்மேளன முடிவின்படி கரூர் மண்டலத்தின் முன்பு சம்மேளன நிர்வாகக்குழு உறுப்பினர் அரவக்குறிச்சி செந்தில்குமார் தலைமையில் திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையை கண்டித்து வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. 11 மணிக்கு தொடங்கிய இந்த வாயிற்கூட்டத்திற்கு சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் மோகன் குமார் வாழ்த்துரை வழங்கினார். கோரிக்கைகளை விளக்கி மத்திய சங்க பொறுப்பாளர்களும், கிளைப் பொறுப்பாளர்களும் உரையாற்றினர்.
1. குளித்தலை அருகே 2.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.
2. ஒன்றியக் குழு தலைவர், உறுப்பினர்கள் சாலை மறியல்.
3.பால் கொள்முதல் செய்வதை பார்வையிட்ட கலெக்டர்.
4. அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
5. மகளிர் காவல் ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
6. நில அளவை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
7. கரூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்.
8. கரூர்: 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர் தற்செயல் விடுவிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் 8. அம்ச கோரிக்கையை முன்வைத்தனர். இதில் வரவேற்பு மோகன்ராஜ் மாவட்ட துணை செயலாளர் முன்னிலை குணசுந்தரி இணை செயலாளர் கோரிக்கை விளக்கவுரை தங்கவேலு மா செ சிறப்பித்தனர்.
கரூர் வெண்ணைமலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (20/12/2024 )நடக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கவுள்ளது. முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 94990-55912 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கரூரில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (21.12.24) கரூர் பழைய அரசு மருத்துவமனையில் நடக்க இருக்கிறது. ஓட்டுநருக்கான அடிப்படைத் தகுதிகள் (PILOT): 10ஆம் வகுப்பில் தேர்ச்சி, 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும் .இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு.7397724819 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.