Karur

News December 29, 2024

டிஎன்பிஎல் ஆலைக்கு மேன்மையான நிறுவனம் சான்று

image

கரூர் மாவட்டத்தில் புகலூரில் டிஎன்பிஎல் ஆலை செயல்பட்டு வருகிறது. கிரேட் பிளேஸ் டு ஒர்க் என்ற உலகளாவிய ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பணியிட கலச்சாரம், பணியாளர்களின் கருத்து மற்றும் நிறுவன நடைமுறைகள் போன்ற அளவுகோல்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் மேன்மையான நிறுவனம் என்ற சான்றிதழை வழங்கியது. டிஎன்பிஎல் ஆலை 96% மதிப்பெண்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

News December 28, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.முகமூடி கொள்ளையர்கள் சிசிடிவி காட்சி வெளியீடு
2.கரூர் மாவட்டத்தில் விஜயகாந்த் நினைவஞ்சலி நடைபெற்றது.
3.பிடிஓ சஸ்பெண்ட்: கரூர் கலெக்டர் உத்தரவு
4.கரூர்: ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்
5.கரூரில் புதிய இணைப்பு சாலை: அமைச்சர் திறப்பு

News December 28, 2024

பிடிஓ சஸ்பெண்ட்: கரூர் கலெக்டர் உத்தரவு

image

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு விதிகளை பின்பற்றாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அலுவலக பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜேந்திரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கரூர் ஆட்சியர் தங்கவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 28, 2024

அமைச்சர் மதிவேந்தனை வரவேற்ற செந்தில்பாலாஜி

image

கரூர் மாவட்டத்திற்கு இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை புரிந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயதீர்வு அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார். இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News December 28, 2024

கரூர்: ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்

image

இன்று கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம், மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1, வேலுச்சாமிபுரம் பகுதியில், புதிய முழு நேர நியாய விலை கடையை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மேயர் கவிதா கணேஷ், துணை மேயர் தரணி சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News December 28, 2024

கரூரில் புதிய இணைப்பு சாலை: அமைச்சர் திறப்பு

image

கரூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மோகனூர்-வாங்கல் சாலை முதல் வெங்கமேடு-காமதேனு நகர் வழியாக சேலம் பழைய நெடுஞ்சாலை வரை இணைக்கும் வகையில், ரூ.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலையை தமிழ்நாடு மின்சார துறை, ஆயத்தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கரூர் ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

News December 28, 2024

மனித கழிவுகளை கையில் எடுத்தால் புகார் கொடுக்கலாம்

image

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரக பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே கையால் அகற்றுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பல்ராம் சிங் என்ற நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் 15 தினங்களுக்குள் அப்படி யாராவது மனிதக் கழிவுகளை கையால் எடுத்தால் உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.

News December 27, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.மாண்டலின் ராஜேஷ் கரூரில் சுவாமி தரிசனம்
2.குளித்தலையில் ஒரு மணி நேரம் பலத்த கனமழை
3.அமைச்சர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி: ஆய்வு செய்த எம்எல்ஏ
4.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
5.வட்டாட்சியரகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

News December 27, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதிஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை துறை செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News December 27, 2024

அமைச்சர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி: ஆய்வு செய்த எம்எல்ஏ

image

க.பரமத்தி வடக்கு ஒன்றியம் குப்பம் ஊராட்சியில் பொதுமக்களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து மனுக்களை பெற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்பகுதியில் உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!