Karur

News January 3, 2025

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.3) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.20, கத்தரி ரூ.45, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.60, இஞ்சி ரூ.60, சுரைக்காய் ரூ.35, வெண்டை ரூ.40, பச்சை அவரை ரூ.120, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.60, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.50, புதினா ரூ.40, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.70க்கு விற்பனை ஆகிறது.

News January 3, 2025

இன்றுமுதல் வீடு வீடாக பொங்கல் பரிசு டோக்கன்

image

கரூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் இன்றுமுதல் இன்றுமுதல் ஜன.8ம் தேதிவரை வீடு வீடாக சென்று நேரடியாக வழங்கப்படுகிறது. மேலும் ஜன.9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

தமிழக கிரிக்கெட் அணி: கரூர் மாணவர் தேர்வு

image

தமிழகத்தில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவிற்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் கரூர் விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் S.S.லக்ஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 16 பேர் கொண்ட அணியில் லக்ஷித் தேர்வு செய்யப்பட்டிருப்பது, கரூர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கிரிக்கெட் பயணம் வெற்றி பெற பள்ளியின் சார்பிலும், கரூர் மக்கள் சார்பிலும் வாழ்த்து குவிகிறது.

News January 2, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-1, 2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவுள்ளது. விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவிப்பு.

News January 2, 2025

விமான போக்குவரத்து படிப்பு விண்ணப்பிக்கவும்

image

தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கிகரிக்கப்பட்ட விமான நிலைய சேவை அடிப்படைப் படிப்புகள் பயிற்சிகளுக்கு சான்றிதழ் வாங்கி ரூ22000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதில் சேர www.tahdco.com என்ற தளத்தில் பதிவு செய்ய கரூர் ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

News January 2, 2025

டி.என்.பி.எஸ்.சி தேர்வு பயிற்சி பதிவு செய்ய அழைப்பு

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி பெற பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 22 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

News January 1, 2025

காவல்துறை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

image

அரவக்குறிச்சி தாராபுரம் பள்ளபட்டி சாலையில் அரவக்குறிச்சி காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பொதுமக்கள் ஒரு சிலரும் உடனிருந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் கேக்குகளை முகத்தில் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

News January 1, 2025

முன்னாள் அமைச்சர் புத்தாண்டு நல்வாழ்த்து

image

கரூர் மாவட்ட அதிமுகவின் நகரச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் வாழும் மக்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார். செல்வ வளமும் உடல் நலமும் ஆரோக்கியமும் பெற்று குடும்பத்துடன் சீறும் சிறப்புமாய் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

News January 1, 2025

கரூர்: முதியவர் ஹெல்மெட் விழிப்புணர்வு பயணம்

image

திருப்பூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (66), சமூக ஆர்வலர். கடந்த 2005 முதல் டூவீலரில் சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டிசம்பர் 5ல் திருப்பூரில் விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்த சிவசுப்பிரமணி நேற்று கரூர் வந்தார். டிராபிக் போலீசார் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிறகு நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதிக்கு புறப்பட்டார்.

News January 1, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!