India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது. தற்போது 5ஆவது சுற்று நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் ஜோதிமணி – 81,461, அதிமுக தங்கவேல் – 59,107, பாஜக செந்தில்நாதன் 15,339 , நாதக கருப்பையா – 15,511 வாக்குகள் பெற்றுள்ளனர்.கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார்.
கரூரில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை.அவர் 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று ஜோதிமணி முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளர்.
கரூர் மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது காங்.வேட்பாளர் ஜோதிமணி முன்னணியில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கரூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கரூரில் வாக்கு எண்ணும் பணிக்கு சென்றபோது நுழைவுவாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல வரிசையாக அமைக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடபெறவுள்ள நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் மொத்தம் 78.51% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும், அதிமுக சார்பில் KRL தங்கவேலுவும், பாஜக சார்பில் செந்தில்நாதனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியானது தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
கரூர் கௌரிபுரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி 101 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகநோட்டக்காரன் பட்டி பகுதியில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கார்ணாம்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம்(41), மணப்பாறையை சேர்ந்த சரவணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் 111.430 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதியில் வெளியிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப ஆலை வீசி வந்த நிலையில், கரூரில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.