Karur

News September 21, 2025

மண்மங்கலம் அதிமுக ஆலோசனை கூட்டம்

image

கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்து, கரூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மண்மங்கலம் ஊராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

News September 21, 2025

கபடி போட்டியை துவக்கி வைத்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

image

கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் குடித்தெருவில், கரூர் பெரியாண்டாங்கோவில் கிளை கழகம் மற்றும் உதயா பிரதர்ஸ் கபாடி குழு இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபாடி போட்டி நேற்று இரவு தொடங்கியது. இந்தக் கபாடி போட்டியை கரூர் சட்டமன்ற உறுப்பினரும், வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News September 21, 2025

கரூர்: மின்கம்பம் பழுதா? உடனே புகார்!

image

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் செய்ய, இதற்காக 24 மணி நேர ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், “<>TNEB Smart Consumer App<<>>” மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். மேலும் சேதமடைந்த மின்கம்பங்களை 94861-11912 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் தகவல் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 21, 2025

கரூர் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று!

image

கரூர் மாவட்டத்தில் தேக்கு, மகாகனி, வேம்பு, குமிழ், செம்மரம், புங்கன், நாவல், மகிழம், பாதாம், புளி மற்றும் வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. தேவைபடுவோர் ஆதார் அட்டை நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றுடன் கரூர் சின்ன தாதம்பாளையத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளகாம். மேலும் விவரங்களுக்கு 94429-17768, 812443-5025 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

News September 21, 2025

8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை கலெக்டர் தகவல்

image

கரூர் மாவட்டத்தில் மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரழிவு, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காக கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம், 3,328 ஆண்கள், 5,249 பெண்கள் உள்ளிட்ட மொத்தம், 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததாக தெரிவித்தார்.

News September 21, 2025

கரூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

கரூர் மக்களே.. மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <>NPCI <<>>என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHAREit

News September 21, 2025

கரூர்: எங்கெல்லாம் மின்தடை என தெரியுமா?

image

கரூர் மக்களே..மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, பசுபதிபாளையம், புலியூர், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, வேலம்பாடி, ஆலமரத்துப்பட்டி, காளிபாளையம், லட்சுமி நகர், பசுபதிபாளையம், அருணாச்சல நகர், ஆண்டிபாளையம், காளிபாளையம், ஆகிய பகுதிகளில் இருக்காது.

News September 21, 2025

கரூர்: தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்!

image

கரூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க, தற்காலிக உரிமம் பெற அக்.10ம் தேதிக்குள் இணையதளம் மற்றும் இ.சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தற்காலிக பட்டாசு கடை அமையவுள்ள இடத்தை, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் உரிம நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

கரூர் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று!

image

கரூர் மாவட்டத்தில் தேக்கு, மகாகனி, வேம்பு, குமிழ், செம்மரம், புங்கன், நாவல், மகிழம், பாதாம், புளி மற்றும் வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. தேவைபடுவோர் ஆதார் அட்டை நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றுடன் கரூர் சின்ன தாதம்பாளையத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளகாம். மேலும் விவரங்களுக்கு 94429-17768, 812443-5025 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

News September 21, 2025

நெரூரில் லாரி மோதி முதியவர் படுகாயம்!

image

கரூர்: மண்மங்கலம் ஒன்றியம் நெரூர் ஊராட்சி அரங்கநாதன் பேட்டையில் ஜெயபிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தை முந்தி சென்று போது திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் லாரியின் மோதியதில் ரங்கசாமி (70)கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!