Karur

News September 25, 2025

கரூர்: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம்.இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 25, 2025

கரூர்: இந்திய அஞ்சல் துறையில் 32,500 காலிப் பணியிடங்கள்!

image

கரூர் மக்களே..இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 32,500 காலிப்பணியிடம்!
1.கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.
2.தேர்வு விதி : தேர்வு இல்லை – மெரிட் முறையில் நேரடியாக ஆட்கள் தேர்வு.
3.வயது : 18 – 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
4.சம்பளம் : மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 29,380 வரை வழங்கப்படும்.
5.விண்ணப்பிக்க: செப்.30க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 25, 2025

கரூர்: வெண்பன்றி வளர்ப்பிற்கு இலவசப் பயிற்சி!

image

மண்மங்கலம் அருகில் உள்ள பண்டுதகாரன்புதூரில் உள்ள
கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (செப்.26) வெண்பன்றி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் காலை 10.30 மணிக்குள் நேரில் வருகை தரவேண்டும், மேலும் விவரங்களுக்கு 0432-4294335, 73390-57073 தொடர்பு கொள்ளலாம் என மையத்தின் தலைவர் அமுதா அறிவித்துள்ளார்.

News September 25, 2025

கரூர்: நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

கரூர் மக்களே..மண்மங்கலம், வெங்கமேடு, ஜவகர்பஜார், ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெங்கமேடு, வெண்ணைமலை, பசுபதிபாளையம், நாவல் நகர், குப்புச்சிபாளையம், பெரிச்சிபாளையம், அருகம்பாளையம், ஜவகர்பஜார், கவுரிபுரம், கரட்டுபாளையம், முத்துகவுண்டன்புதூர், சுக்காலியூர் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது.

News September 25, 2025

உங்களுடன் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள்; எல்லமேடு VKD மண்டபத்திலும், தாந்தோணிமலை VRS வேல் மஹாலிலும், கடவூர் வட்டாரம், ஆதனுார் மற்றும் செம்பியநத்தம் ஆகிய ஊராட்சிகளுக்கு கீழமேட்டுப்பட்டி துர்க்கை அம்மன் கோயில் அருகிலும், குளித்தலை காவேரி நகர் அண்ணா சமுதாய மண்டபத்திலும், ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 25, 2025

கரூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

கரூர் மாவட்ட வேலுச்சாமிபுரத்தில் (செப்டம்பர் 25) மாலை 6:00 மணிக்கு “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற புரட்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். கரூர் மாவட்டத்திற்கு மருத்துவம், போக்குவரத்து, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய எடப்பாடி பழனிசாமியினை விஜயபாஸ்கர் வரவேற்கிறார்.

News September 24, 2025

கரூர்: அரசு சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அரசு சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி 30.09.2025 முதல் நடைபெறவுள்ளது. இதில் சேர விரும்பும் மனுதாரர்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நாளை (25.09.2025) காலை 10.00 மணிக்கு மையத்தில் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 24, 2025

கரூர்: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

image

கரூர்: ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில் <>இங்கே கிளிக்<<>> செய்து, நுழைந்து ஆதார் எண்ணை தந்து Login செய்யவும்.
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.

News September 24, 2025

கரூர்: அரசு வேலை அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க…

image

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி நாள் 02.10.2025 ஆகும். கரூர் மக்களே, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News September 24, 2025

கரூர்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

1)கரூரில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2)அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3)ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால்<> ‘வெற்றி நிச்சயம்’<<>> திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.

உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!