Karur

News February 9, 2025

கரூரில் டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள் கைது

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார், (47) மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் பகுதியில் சென்றபோது கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திருநங்கைகள் அனிதா (26) மீரா (20) ஆகியோர், பொலிரோ காரை வழிமறித்து டிரைவர் சிவக்குமார் வைத்திருந்த ரூ 1,27,100 பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து சிவகுமார் அளித்த புகாரின் படி டவுன் போலீசார் திருநங்கைகள் அனிதா, மீரா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

News February 9, 2025

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்11ல் விடுமுறை என கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். கரூர் மாவட்டத்தில் வரும் 11ல் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யப்படடால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News February 8, 2025

கரூரில் டிராக்டர் மோதி ஒருவர் படுகாயம்

image

கரூர் கிருஷ்ணராயபுரம் வட்டம் பில்லா பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகில் உள்ள புனவாசிப்பட்டி கிராமத்தில் மதுபான பாட்டில் வாங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பொழுது எதிரில் வந்த புனவாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் அவரின் மீது மோதியதில் இளைஞர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News February 8, 2025

கரூரில் 5 ஆண்டுக்குப் பிறகு கைதான குற்றவாளி

image

கரூர் மாவட்டம் வெள்ளியணை மணவாடி பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக நடைபெற்று வந்த குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 23வது பிரவீன் என்கிற வெங்கடேஷ்(29) இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையம்: பார்வையிட்ட ஆட்சியர்

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரராக்கியத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக நடைபெற்று வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தன் ஆகியோர் உள்ளார்.

News February 8, 2025

கரூர் 91,245 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி

image

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளின் கேள்விகளுக்கு கலெக்டர் பதிலளித்தார். அப்போது கரூர் மாவட்டத்தில் கடந்த ஜன.,1 முதல், 14 வரை கால்நடை மருத்துவ துறை சார்பில் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, 91,245 நாட்டு கோழிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

News February 8, 2025

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றவருக்கு எலும்பு முறிவு

image

லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடை வீதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த வெட்டுசங்கர் (35) என்பவர் நாகராஜிடம் தகராறில் ஈடுபட்டு வாழை இலை அறுக்கும் கத்தியால் நாகராஜின் தலையில் வெட்டினார். லாலாபேட்டை போலீசார் நேற்று வெட்டுசங்கரை பிடிக்க முயற்சித்தனர். தப்பி ஓடி பாலத்தில் இருந்து குதித்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாம். சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

News February 7, 2025

ரூ.35 ஆயிரம் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்கள்

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பள்ளி கவுண்டனூரைச் சேர்ந்தவர் சண்முகம் 23. இவர் ஹிட்டாச்சி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி வேலை செய்த பணத்தை பெற்றுக் கொண்டு தனது பைக்கில் புழுதேரி சாலையில் வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 நபர்கள் சண்முகத்தை வழிமறித்து பாக்கெட்டில் இருந்த ரூபாய் 35 ஆயிரம் பறித்துச் சென்று விட்டனர். தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.

News February 7, 2025

கரூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

image

கரூர் ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி நேற்று பிற்பகலில் விரைவு ரயில் அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் மோதி தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து கரூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்துவருகின்றனர்.

News February 6, 2025

கரூர்: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும்.மேலும்,9655864426 என்ற எண்ணுக்கு What’s App பண்ணுங்க.

error: Content is protected !!