India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமிக்கு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள மேட்டு மகாதானபுரத்தில் கோவில் அமைந்துள்ளது. மகாலட்சுமி அம்மன் பள்ளத்தில் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. பக்தர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலை அனைவருக்கும் சென்று வாருங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் கரூர், தாராபுரம் சாலையில் வங்கி, போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் இதற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கள் வண்டிகளை பார்க்கிங் இல்லாததால் அப்படி நிறுத்தி விட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாரை அமர்த்தி கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.
நாளை முகூர்த்தநாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 முன்பதிவு வில்லைகளும் வழங்க பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தைப்பூசம், விடுமுறை நாளில் அலுவலகம் திறப்பு அறிவிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் . அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க <
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். <
இந்திய ரயில்வே துறையில் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பபடள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு,ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது NCVT மூலம் வழங்கப்படும் தேசிய தொழிற்பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18,000வரை வழங்கப்பட இருக்கின்றது. மேலும் விவரங்களுக்கு இந்த <
கருப்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மல்லிகை கடையில் மண்ணெண்ணெய் நிரப்பி தீ பற்ற வைத்தது தொடர்பான வழக்கில் முகமது அன்சாரி என்பர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை பேரில் ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின்படி இன்று முகமது அன்சாரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூரில் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும், திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். சித்தர் கருவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது. இங்கு வந்து திருமண ஆகாதவர்கள் சாமி தரிசனம் செய்தால் திருமணம் ஆகும்.
திருச்சி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (55), டாஸ்மாக் தொழில்பேட்டை குடோன் கிளார்க். நேற்று பைக்கில் கரூர் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது இவரது பைக்கும் மாயனூர் பகுதி பிரபாகர் என்பவர் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதின. படுகாயமடைந்த செல்வகுமார் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Sorry, no posts matched your criteria.