Karur

News September 30, 2025

கரூரில் லாரி மோதி பரிதாபமாக பலி!

image

கரூர்: கருப்பம்பாளையம் பிரிவு சாலையில் யாசகர் ஒருவர் சாலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் அருணன் ஒட்டி வந்த லாரி யாசகர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவரை, கரூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் காண்பதற்காக வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விஏஓ செந்தாமரை புகார் கொடுத்ததின் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று(செப்.29) வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.

News September 30, 2025

கரூரில் கவிழ்ந்த டீசல் லாரியால் பரபரப்பு!

image

கரூர்: ஆத்தூர் பாரத் பெட்ரோலியம் எரிபொருள் கிடங்கில் இருந்து டேங்கர் லாரி ஒன்று டீசல் நிரப்பிக் கொண்டு காரைக்குடி நோக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையிலேயே கவிழ்ந்ததில், லாரியின் டீசல் கசிந்தது சாலையில் ஓடியது. உடனே சம்பவைடத்திற்கு விரைந்த தீயணிஅப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பெரும் விபத்தை தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News September 29, 2025

கரூர் துயரம்: தவெக மாவட்டச் செயலாளர் கைது

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை கரூரில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 29, 2025

கரூர்: உயிரிழப்பு குறித்து கலெக்டர் அறிக்கை

image

கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட செய்தி குறிப்பில் கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்,110 பேர் காயமடைந்தனர், 51 பேர் வீடு திரும்பிய நிலையில் 51 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 18 பேர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

News September 29, 2025

BREAKING: கரூர் துயரம்.. 3 பேர் அதிரடி கைது!

image

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சகாயம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News September 29, 2025

BREAKING: கரூர் துயரம்.. 25 பேர் மீது வழக்கு பதிவு

image

கரூர் கூட்ட நெரிசல் தெடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு, சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டதாக காவல் துறை நடவடிக்கை, மேலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

News September 29, 2025

கரூர்: ஒன்றியங்களில் ஓட்டுநர் வேலை APPLY NOW!

image

கரூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> பண்ணுங்க. செப்.30 நாளையே கடைசி தேதி ஆகும். SHARE பண்ணுங்க.. ஒருவருக்காவது உதவும்!

News September 29, 2025

கரூர்: மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதற்கு (16.10.2025) கடைசி நாள் ஆகும். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 29, 2025

கரூர்: ரூ.30,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

கரூர் மக்களே.., மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ்(BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள ’Trainee Engineer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு BE/B.Tech/B.sc பொறியியல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 29, 2025

கரூர்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு<<>> க்ளிக் செய்து Grievance Redressal, கோவை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.SHARE பண்ணுங்க..

error: Content is protected !!