Karur

News October 1, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

கரூர் மாவட்டத்தில் வரும் காந்தி ஜெயந்தி (02.10.2025) தினத்தை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல். 1, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபான விடுதிகள், பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும். அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

News October 1, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

கரூர் மாவட்டத்தில் வரும் காந்தி ஜெயந்தி (02.10.2025) தினத்தை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல். 1, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபான விடுதிகள், பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும். அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

கரூர்: சொத்துக்காக அண்ணனை தாக்கிய தம்பி!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் தெற்கு இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ஜானி பெஸ்கி 40. இவருக்கும் இவரது சகோதரர் ஜார்ஜ் வில்லியம் என்பவருடன் பாகப்பிரிவினை சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது. நேற்று ஜானி பெஸ்கியை அவரது தம்பி ஜார்ஜ் வில்லியம் திட்டி குச்சியால் தாக்கினார். திருச்சி அரசு மருத்துவமனையில் ஜானி பெஸ்கி சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். நங்கவரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு.

News September 30, 2025

கரூர்: திமுகவை விமர்சித்த மேனேஜர் கைது!

image

கரூர்: மணவாசி மற்றும் திருப்பராய்த்துறை டோல் பிளாசா மேனேஜராக பணிபுரிந்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(43) என்பவர் கரூர் தவெக பிரச்சாரத்தில் துயர சம்பவத்திற்கு தவெக விற்கு ஆதரவாக திமுகவை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரப்பியதாக மாயனூர் போலீசார் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 30, 2025

காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கரூர் வருகை!

image

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) மற்றும் எம்.பி.யான கே.சி.வேணுகோபால் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் வருகிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்நிகழ்ச்சியில் கரூர் ஜோதிமணி எம்.பி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

News September 30, 2025

பிரதம மந்திரி காப்பீடு திட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

கரூரில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் (PMFBY)
வேளாண் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய தற்போது காரீப் பருவம் 2025ஆம் ஆண்டிற்கு துவரை மற்றும் நிலக்கடலை பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காரீப் பருவ பயிர் காப்பீடு செய்ய 30.09.2025 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News September 30, 2025

பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா துவக்கம்!

image

கரூர் மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோயிலில் இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. கொடி மரத்திற்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நிகழ்வுடன் விழா துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழு கமிட்டியினர் செய்துள்ளனர்.

News September 30, 2025

கரூர்: பஸ்ஸில் மயங்கி விழுந்து பரிதாப பலி!

image

கரூர்: குளித்தலையில் ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்த போஸ்ட்மேன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பயணிகள் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவர்கள், ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 30, 2025

கரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கரூர் மக்களே.., இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ஹாய் என்று ஆங்கிலத்தில் மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 30, 2025

கரூர் துயரம் ; காவல்துறை எச்சரிக்கை!

image

கரூர் மக்களே.., கடந்த செப்.27ஆம் தேதி கரூரில் நடந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களின் விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. ஏதேனும் வதந்தி பரப்புவது தெரிய வந்தால், அல்லது காவல்துறைக்கு தேவைப்பாட்டால் விசாரணை, கைது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜாக்கிரதையுடன் பதிவிட அறிவுறுத்தப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!