India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூரில் மிகவும் சுவையான தின்பண்டம் என்றால் அது வெள்ளியணை அதிரசம்தான் என்கிறார்கள். குறிப்பாக வெள்ளியணைக்கு சென்றால் கடைகளில் நாம் பார்க்கக்கூடியது அதிரசம்தான். அச்சு வெல்லம், காவிரி தண்ணீர் பயன்படுத்திச் செய்யப்படும் இந்த அதிரசத்திற்கென்றே தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இதே போல் கரூரில் வேறு என்ன சிறப்பான உணவு உள்ளது என்று கமெண்ட் பண்ணுங்க மக்களே.
கரூர், மண்மங்கலம், ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் மகாசோளியம்மன், மகாமுத்துசாமி கோயில் கும்பாபிஷேகம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. முன்னாதாக இன்று கணபதி ஹோமம், வருகிற 7-ந்தேதி 48 புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அதனை தொடர்து 10-ந்தேதி ஆறாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.15,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே<
கரூர் அருகே செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (71). இவர் ஈரோடு சாலையில் உள்ள தனியார் சிமெண்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். நேற்று அங்கு வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாகர் குமார் (20), தகராறு செய்து பழனியப்பனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். கரூர் டவுன் போலீசார் அவரை கைது செய்து நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சின்னசேங்கல் அடுத்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (45). இவரின் மகன் வேல்முருகன் (20) நேற்று மது குடித்துவிட்டு வந்ததை மஞ்சுளா திட்டி உள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் உள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கரூரில் மட்டும் 38 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே <
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இதில் கரூர் மாவட்டத்தில், 45 மையங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை, 4,741 மாணவர்களும், 5,470 மாணவியரும் என மொத்தம், 10211 பேர் தனித்தேர்வர்களாக, 52 பேர் என, 10,263 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வுக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து தேர்வு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புன்னம்சத்திரம் பகுதியில் 5 கல்லூரி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பாட்டில் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு மோகன்ராஜ் தாக்கியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் ஆனந்த், அஜீத்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தியாகு, ரவி, ராகுல் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
கரூர், குளித்தலையில் மிகவும் பிரசித்தி பெற்றது கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்.இங்கு பெண்கள் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு சிவன் துணையாக இருந்து காப்பார் என்பது நம்பிக்கை. பொதுவாக பெண்கள் தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு வேண்டிக்கொள்ள இத்தல இறைவன் அதை உடனே நிறைவேற்றி கொடுப்பார் என்பது நம்பிக்கை.இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.
கரூர் மாவட்டம் சித்தலவாய் ரயில் நிலையம் அருகே ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்த கிடந்ததாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில் அவர் கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (50) இயற்கை உபாதை கழிக்க வந்த போது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கரூர் ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை
Sorry, no posts matched your criteria.