India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின் பேரில், கரூர் மாவட்டக் காவல் துறை பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசர காலங்களில் காவல்துறை உதவிகளை விரைவாகப் பெற, அனைவரும் ‘காவல் உதவி (KAVAL UDAVI)’ என்ற பிரத்யேகச் செயலியை இன்றே உடனடியாகத் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.கரூர் மக்களே உடனே பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கரூர்: புலியூர் அமராவதி நகரைச் சேர்ந்தவர் ராமு(60) பெயின்டரான இவர் கடந்த அக்.4ஆம் தேதி புலியூர் லட்சுமணன் நகரில் உள்ள சிவகாமி என்பவரது வீட்டில், சுவரில் பெயின்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பார்தவிதமாக மின்சாரம் தாக்கியதில், படுகாயமடைந்த ராமு மருத்துவமனை சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை சார்பாக நேற்று சென்னையில் மாணவர்களுக்கான மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் டிராபி GYMNASTICS விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கரூர், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் வதூத் என்ற மாணவன் GYMNASTICS போட்டியில் வென்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இவருக்கு வெற்றி பதக்கத்தையும் காசோலையும் தமிழக அரசு சார்பாக வழங்கியது.

கரூர் மாவட்டத்தில் நாளை (06.10.2025) காலை 6 மணி முதல் புறநகர் பேருந்துகள் அனைத்தும் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தாராபுரம், பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் இருந்து வரும் பேருந்துகள் வழக்கம் போல் பழைய பேருந்து நிலையம் செல்லும். 2) மதுரை, திண்டுக்கல், பழனி, சுக்காலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் என தெரிவித்தனர்.

கரூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், <

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பாலக்காடு – திருச்சி ரயில் நாளை(அக்.6) திருச்சி செல்லாது. பாலக்காட்டில் புறப்பட்டு கரூர் வரை மட்டுமே செல்லும். அதே நாளில் திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் கரூர் மாயனுார் வரை மட்டுமே செல்லும். பராமரிப்பு பணி முடிந்ததும் மாயனூரில் இருந்து பாலக்காடு வரை வழக்கமான நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம்.கரூர் மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

கரூர் மாவட்டம், புலியூர் அருகே சாலையில் ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டிருந்த ராமு என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த
மாயனூர் போலீசார்,ராமுவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பள்ளப்பட்டி நகராட்சி, கரூர் மாநகராட்சி 40 வது வார்டு, தாந்தோணி வட்டாரம் பள்ளபாளையம், கடவூர் வட்டாரம் மாவத்தூர், குளித்தலை வட்டாரம் இனுங்கூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.