India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. விசாரணைக்கு உதவுவதற்காக, சிறப்பு விசாரணைக் குழுவில் 3 காவல் ஆய்வாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 8 பேர் உள்ளனர். தடயவியல் நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’பயிற்சியுடன் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வருகிற அக்.16ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

கரூரில் கடந்த செப்.27ஆம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று(அக்.6) மாலை 3:00 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேரில் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூர்: தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைதான கரூர் மாவட்ட செயளாலர் மதியழகன், பவுன்ராஜ் இன்று(அக்.6) ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரையும் அக்.14 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டதையடுத்து, கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கரூர் மக்களே.., மத்திய அரசுப் பணியில் சேர ஆசையா..? தேர்வெதுவும் எழுதத் தேவையில்லை. அரசின் என்.எல்.சொ இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, இதற்கு ஐடிஐ, பிஎஸ்சி, பிபிஏ, பிசிஏ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

கரூர் மக்களே.., உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. கனரா வங்கியில் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. உங்கள் வங்கி வேலைக் கனவைத் தொடங்க இது அருமையான வாய்ப்பு. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <

கரூர் மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

கரூர்: குளித்தலை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி(23). இவரது கணவர் பிரகாஷ்(24). கடந்த செப்.29ஆம் தேதி மாலை 6:00 மணியளவில் தோகைமலை சென்று வருவதாக கூறி சென்ற பிரகாஷ், விமலா என்பவருடன் சென்று விட்டார். இதுகுறித்து அவரது மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி
வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் நாளை (06.10.2025) காலை 6 மணி முதல் புறநகர் பேருந்துகள் அனைத்தும் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தாராபுரம், பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் இருந்து வரும் பேருந்துகள் வழக்கம் போல் பழைய பேருந்து நிலையம் செல்லும். 2) மதுரை, திண்டுக்கல், பழனி, சுக்காலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் என தெரிவித்தனர்.

கரூர் மாநகராட்சி கருப்பம்பாளையத்தில் 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இன்று(அக்.6) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஸ் ஸ்டாண்ட் கொண்டு வரப்படவுள்ளது. அங்கிருந்து அனைத்து புறநகர் பஸ்களும் இயக்கப்படுகிறது. கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.