India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தோகைமலை அருகே கழுகூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயானம் உள்ள இடத்தை சுற்றியுள்ள இடங்களை சிலர் ஆக்கிரமித்து சுமார் 50 சென்ட் நிலமாக இருந்த மயானம் தற்போது 10 சென்ட் நிலமாக சுருங்கி விட்டது. மேலும் அங்கிருந்த வேப்ப மரங்கள் மற்றும் சீமை கருவேல மரங்களை சிலர் வெட்டி கடத்தி வந்து உள்ளனர். தகவல் அறிந்த கழுகூர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Classes Education in schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship portal) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15.10.2025 வரை https://bcmbcmw.tn.gov.in/welfschemes.html நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

கரூரில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <

கரூர் மக்களே.. உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <

கரூர் மாவட்டத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி வகுப்பு திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (அக்.18) துவங்க உள்ளது. இப்பயிற்சிக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9442380705, 04312715748, 9994647631 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரா.அபிராமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சலவைப்பெட்டி, பயிற்சி சான்றுகள் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், குளித்தலை சார்-ஆட்சியர் தி.சுவாதிஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கரூர் துயர சம்பவம் நடைபெற்ற இடத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து வேலுச்சாமிபுரம் காவலர் குடியிருப்பில் போக்குவரத்து காவலர் தெய்வேந்திரன் மனைவி சுகன்யா உயிரிழப்பிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து ரூ. 1 லட்சத்திற்க்கான காசோலையை தெய்வேந்திரனிடம் வழங்கினார். அப்போது மக்கள் நீதி மையம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (அக்.7) நடைபெறவுள்ளது. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உடனே, இம்முகாமில் கலந்து கலந்து கொண்டு பயன்பெறுங்கள். மேலும், இம்முகாம் குறித்த விவரங்கள் அறிய <

கரூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆகஸ்ட் மாதத்திற்குரிய சாதாரண கூட்டம் (ம) அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமை வகித்தார். துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இக்கூட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்ததையொட்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.