India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர்: சேர்வைக்காரன்பட்டி முள்ளிப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மனைவியுடன் நேற்று டூவீலரில் கருங்குளம் அருகே வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அருவாளை காட்டி அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 3.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடியை சேர்ந்தவர் மாதேஷ் (18). இவர் கரூர் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரில் உள்ள தனது மாமா வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி கடந்த 20ல் தொடங்கி வரும் அக்., 18 வரை நடக்கிறது. இப்பணி ஓட்டுசாவடி நிலை அலுவலரால் மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் தகவல் அளித்தார்.
கரூர்: தாந்தோணிமலையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 17, 19 வயதிற்கான கபடி, எறிப்பந்து போட்டி மற்றும் 14 வயதிற்கான பூப்பந்து போட்டியில் முதலிடமும் பெற்று நேற்று சாதனை படைத்தனர்.
கரூர்: சிந்தாமணிப்பட்டி தரகம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது கணவர் கண்ணன் என்பவர் வீட்டிற்கு வந்து மனைவியும், மாமியாரும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று கண்ணனை கைது செய்தனர்.
கரூர்: தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட 23 ஊராட்சிகளில் 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு திருட்டு, போதை பொருட்களை கடத்தல், வெளியூர் ரவுடிகள் நடமாடுவது உள்ளிட்ட குற்றங்கள் நடந்து வருகிறது. இவற்றை தடுக்க 23 ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தோகைமலை போலீசார் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில் குடிநீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். இந்நிலையில், சட்டவிரோதமாக ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக கூறி 2 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் மீது சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தையொட்டி மண்ணிற்குள் செல்லும் கூட்டு குடிநீர் குழாயில் நேற்று தீடிரென உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளி வளாகத்திற்குள் முழுவதுமாக நிரம்பியது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் வரை நேற்று மற்றும் இன்று (22.08.2024) ஆகிய 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராம்பிரசாத் (24) என்பவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராம்பிரசாத் உள்பட 3 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவிலிருந்து காலை வரை கனமழை பெய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.