Karur

News October 10, 2025

கரூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

image

கரூர் மக்களே.., உங்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், புகார்கள் குறித்த அனைத்து சேவைகளுக்கும் நாளை(அக்.11) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்களம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 9, 2025

கரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்று பெறாதவர்களுக்கு பிரதிவாரம் புதன்கிழமை அரசு மருத்துவமனை பழைய வளாகத்தில் மருத்துவ முகாம் நடக்கிறது. கை, கால் இயக்க குறைபாடு, தொழுநோய், மூளை முடக்குவாதம் மற்றும் தசை சிதைவு போன்ற உடல் குறைபாடுகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்படும்.

News October 9, 2025

கரூர்: 10ஆம் வகுப்பு போதும்! உடனடி அரசு வேலை

image

கரூர் மக்களே தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தின் கீழ், 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.35,000 வழங்கப்படும். இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (14.10.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 9, 2025

கரூர்: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

image

1)கரூர் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
3)இதற்கு <>Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம்.
4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 9, 2025

கரூரில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

image

கரூர் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

News October 9, 2025

கரூர்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

image

கரூர் மக்களே.., உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே<<>> கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 9, 2025

கரூரில் இலவச டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி!

image

கரூர் மக்களே.., தற்போது வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமான துறை ‘டிஜிட்டல் மார்கெட்டிங்’ இதற்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில், நமது மாவட்டத்திலேயே இலவச டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 9, 2025

கரூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா..? இங்க போங்க!

image

கரூர் மாவட்டத்தில் வரும் அக்.11ஆம் தேதி கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், பொருட்களின் தரம் குறித்த புகார்கள தெரிவிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News October 9, 2025

கரூர்: அரசு பஸ் மோதி ஒருவர் பலி!

image

கரூர்: வாங்கல் அருகே, மோகனூர் சாலையில், செல்லப்பன் என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே வழியில் தமிழ்நாடு அரசு பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே செல்லப்பன் பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து வாங்கல் போலீசார் நேற்று அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News October 9, 2025

கரூர்: கிராமப்புற இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

கரூர்: கிராமப்புற இளைஞர்கள் மூன்று மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் கிராமப்புற இளைஞர்களுக்கு மூன்று மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர கட்டணம், ரூ.1,000. இதற்கு https://forms.eduqfix.com/certificate/add இணையதளம் வாயிலாக செலுத்தப்பட வேண்டும்.

error: Content is protected !!