Karur

News September 10, 2024

கரூர் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

கரூரில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 14-09-2024 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணிவரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவுறுத்துள்ளார்

News September 9, 2024

கரூரில் நாளை விளையாட்டு போட்டிகள் துவக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான நாளை கரூர் விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன. 2024 – 25 ஆம் ஆண்டிற்கு போட்டியில் மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர். மேலும், விவரங்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலரின் அலைபேசி எண். 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

கரூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கரூர், காணியாளம்பட்டியில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3பேரை போலீசார் கைது செய்தனர். ➤கரூர் வடக்கு பாளையம் பகுதியில் பூட்டி இருந்த 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ➤தாளியாம்பட்டியில் விநாயகர் சிலையை கரைக்க ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டுச் சென்றனர். ➤மாயனூர் தடுப்பணைக்கு 17,718 கன அடி நீர்வரத்து.

News September 9, 2024

கரூர்: வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

image

கரூர்:சின்ன வேப்பநத்தத்தை சேர்ந்தவர் விக்ரம் (25). இவர் கரூர் ஆட்டோ வொர்க் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது நண்பர் திருமணத்திற்கு வலையர் பாளையம் சென்றுள்ளார். அதன்பிறகு அங்குள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் குளித்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 9, 2024

கரூரில் தந்தையை தாக்கிய பாசக்கார மகன் கைது

image

கரூர்: வெங்கமேடு என்எஸ்கே நகரை சேர்ந்தவர் முருகன் (54). இவரிடம், அவரது மகன் சுகேஷ் (27) பணம் கேட்டுள்ளார். ஆனால், முருகன் பணம் தர மறுத்ததால் சுகேஷ் கூர்மையான ஆயுதம் மூலம் தந்தையை தாக்கியுள்ளார். இதில் நெஞ்சில் படுகாயமடைந்த முருகன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, சுகேஷை வெங்கமேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.

News September 9, 2024

கரூர்: குளித்தலை பகுதியில் 1,843 பேர் மீது வழக்கு

image

குளித்தலை போக்குவரத்து போலீசார் கூறுகையில் “கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் ஒட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, செல்போன் பேசியபடி வாகனம் ஒட்டியது, அதிவேகமாக வாகனம் ஒட்டியது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகன நிறுத்தம், சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 1,843 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.21 லட்சத்து 4,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

News September 8, 2024

கரூர் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க ஊர்வலம்

image

கரூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில் பசுபதீஸ்வரர் கோயில், சின்னதாராபுரம், தென்னிலை, வேலாயுதம்பாளையம், தாந்தோணி வெங்கமேடு, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட பூஜைகள் நடைபெற்றது. மேலும் இன்று சுமார் 300 மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துக் கொண்டு வேலாயுதம்பாளையம் ஆற்றில் கரைக்க போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றனர்.

News September 8, 2024

கரூரில் லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

குளித்தலை அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தனியார் நிறுவன செக்யூரிட்டியான கார்த்திக். இவர், நேற்று டூவீலரில் லாலாப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். லாலாப்பேட்டை போலீசார், கார்த்திக் உடலை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குளித்தலை போலீசில் சரணடைந்தார்.

News September 7, 2024

லாலாபேட்டை லாரி மோதி ஒருவர் படுகாயம் 

image

கரூர் மாவட்டம் லாலாபேட்டை கருப்பத்தூரில் பெட்டவாய்த்தலை அருகே பொய்யாமணி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News September 7, 2024

கரூர் மாவட்டத்தில் எத்தனை விநாயகர் சிலைகள்?

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட 4 தொகுதிகளை சேர்த்து இந்து முன்னணி சார்பில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் சேர்ந்து 300 சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.