India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நாளை மூடி வைக்க வேண்டும் என கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரவை மீறி மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், ரூ.1,25,200 முதல் ரூ.2,54,800 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு இந்த <
கரூர் உழவர் சந்தையில் இன்றைய (பிப்.10) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.20, கத்தரி ரூ.30, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.15, வெண்டை ரூ.35, பச்சை அவரை ரூ.80, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.65, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.40, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் கடந்த 6 இரவு கொசுவர்த்தி பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெயசந்திரன் உடையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த ஜெயசந்திரன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். வெள்ளியணை போலீஸ் விசாரிக்கின்றனர்.
“பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது. சிறந்த 3 குறும்படங்களுக்கு ரொக்கப்பரிசு முதல்பரிசு- ரூ. 25 ஆயிரம், இரண்டாம்பரிசு- ரூ. 15 ஆயிரம்மூன்றாம்பரிசு- ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த <
கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. பசுபதீஸ்வரர்லிங்கம், பால் சுரக்கும் பசு மற்றும் இது போன்ற பல்வேறு சிற்பங்கள் இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
கரூர் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க முகாம் நாளை 10ம் தேதி முதல், 17 வரை நடக்கிறது. இதில், 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட 2,39,236 பேருக்கும், 20-30 வயதுடைய, 80,627 பெண்கள் (கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து பிற பெண்களுக்கு) ஆகியோருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார், (47) மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் பகுதியில் சென்றபோது கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திருநங்கைகள் அனிதா (26) மீரா (20) ஆகியோர், பொலிரோ காரை வழிமறித்து டிரைவர் சிவக்குமார் வைத்திருந்த ரூ 1,27,100 பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து சிவகுமார் அளித்த புகாரின் படி டவுன் போலீசார் திருநங்கைகள் அனிதா, மீரா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்11ல் விடுமுறை என கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். கரூர் மாவட்டத்தில் வரும் 11ல் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யப்படடால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் கிருஷ்ணராயபுரம் வட்டம் பில்லா பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகில் உள்ள புனவாசிப்பட்டி கிராமத்தில் மதுபான பாட்டில் வாங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பொழுது எதிரில் வந்த புனவாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் அவரின் மீது மோதியதில் இளைஞர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.