India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் உதவியாளருடன் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இணையதளம் மூலமாக பதிவு செய்ய அறிவுறுத்தல், மேலும் ஆதார் கார்டு, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு சான்றிதழ், போன்றவற்றை www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்து கொள்ளலாம். இந்த தளம் முற்றிலும் இலவசமானது.மேலும் விவரங்களுக்கு 9499055912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.
கரூர் மாவட்டத்தின் காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு பணி செய்யும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கரூர் வனக்கோட்டம், கதவு எண்-44, பூங்கா நகர் பிரதான சாலை, தான்தோன்றிமலை, கரூர்- 639005 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ செப்-18 ஆம் தேதிக்குள் உங்கள் தகவலை அனுப்ப வேண்டும்.
நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், மன்னிப்பு கேட்ட சம்பவத்திற்கு ஜோதிமணி MP கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிகொடுக்காமல், அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளார். இது குறித்து அனைத்து கட்சி தலைவரும் விமர்சித்து வருகின்றனர்.
கரூர் கணபதிபாளையத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற அமைப்புடன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிற்கிணங்க இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.
கரூரில் 20.09.2024 மற்றும் 26.09.2024 இரண்டு நாட்கள் வெண்ணமலையில் மாவட்ட அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேற்காணும் முகாமிற்கு கரூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச் சான்று ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்:04324-257130 தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேட்டுத் திருக்காம்புலியூர் சாலையில் லாட தன்னாசி கோவில் அருகில் 0/6 ல் பால வேலை மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணியும் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து லாட தன்னாசி கோவிலின் அருகில் பொதுமக்களின் நலன்கருதி புதிதாக வேகத்தடை அமைக்கும் பணியும் முடிவுற்றது அதனை கோட்டப்பொறியாளர், ரவிக்குமார். உதவிக்கோட்டப்பொறியாளர் ஆனந்தக்குமார், அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் – 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ், சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் நாளை 13ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் 2 தளத்தில் நிகழ்வு கூட்டம் நடைபெறவுள்ளது. பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.