Karur

News October 7, 2024

ஜாதி வன்கொடுமை: புகாரளிக்க தொலைபேசி எண்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கரூர் மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள், தங்களது புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக, அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் புகார்களை பதிவு செய்ய, 18002021989 அல்லது, 14566 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

அரசு மருத்துவமனையில் புதிய டீன் பதவியேற்பு

image

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் 23வது மருத்துவக் கல்லூரி 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, இயங்கி வருகிறது. கல்லூரிக்கு பத்தாவது முதல்வராக டாக்டர் வா.லோகநாயகி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 6, 2024

கரூரில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் செப்டெம்பர் மாதம் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் இன்று முதல் 8ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 6, 2024

கிரிக்கெட் போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு

image

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க அனுமதியுடன், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் சீனியர் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நாகரத்தினம், மணிகண்ட பிரபு, மதன்குமார், ஷியாம் பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News October 5, 2024

கரூரில் உதவிதொகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் நேற்று தகவல் அளித்துள்ளார்.

News October 5, 2024

தவெக கரூர் மாவட்ட தலைவர் மறுப்பு செய்தி

image

குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கைது செய்யப்பட்ட ராஜாவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்திலோ அல்லது விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று தவெக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.

News October 5, 2024

கரூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

கரூர், பரமத்தி, வெஞ்சமாங்கூடலூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், பால விடுதி, லாலாபேட்டை, மாயனூர், சின்னதாராபுரம், பள்ளப்பட்டி, சின்னப்பநாயக்கம்பட்டி, மைலாம்பட்டி, சிந்தாமணிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழையும், சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News October 4, 2024

சாலை ஓர கட்டைகளில் இடித்து கார் சேதம்

image

கரூர் டூ சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சற்று முன்பு ஷிப்ட் கார் சாலையில் உள்ள ஓரை கட்டைகளில் மோதி விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஆனது. ஓட்டுநர் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வெங்கமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 3, 2024

கரூரில் புத்தக திருவிழா இன்று தொடக்கம்

image

கரூர் மாவட்ட நிர்வாகம் (ம) பொதுநூலக இயக்கம் சார்பில் இன்று மாலை புத்தக திருவிழா தொடங்குகிறது. இதை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். இதில், எம்.பி-க்கள் ஜோதிமணி, அருண்நேரு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்நிகழ்வில் சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கரன், முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தலைப்பில் உரையாற்றவுள்ளனர்.

News October 2, 2024

மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு

image

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பசுபதிபாளையம், குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர் பகுதிகளில் போல்லீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 286 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.