Karur

News March 30, 2025

கரூரில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோயில்கள்!

image

கடம்பவனேஸ்வரர் கோயில் – குளித்தலை. கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் – வெஞ்சமாங்கூடலூர். புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் – வேலாயுதம்பாளையம். கல்யாண வெங்கடரமணர் கோயில் – தான் தோன்றிமலை. மாரியம்மன் கோயில் – கரூர். பசுபதீஸ்வரர் கோயில் – கரூர். தாகுகாவனேஸ்வரர் கோயில் – திருப்பராய்த்துறை. சுந்தரேஸ்வரர் கோயில் – புகழிமலை. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News March 30, 2025

கரூர் மக்கள் கவனத்திற்கு

image

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. எனவே, வெயிலில் இருந்து காத்துக்கொள்ள, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும். ▶ தாகம் எடுக்காவி்ட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், அருந்த வேண்டும். ▶ தேநீர், காபி, மது, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க.

News March 30, 2025

கரூரில் கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்மருதங்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் நேற்று முன்தினம் இரவு கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார் 24 என்பவர், கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, சஞ்சய்குமாரை கரூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 30, 2025

மாயனூரில் தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை

image

கரூர் மாவட்டம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (23). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளதால் நேற்று அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. நாள் விரக்தி அடைந்தவர் வீரியப்பட்டியில் உள்ள சகோதரி சிவரஞ்சனி வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 29, 2025

பெண்ணை கட்டையால் தாக்கிய நபர் கைது

image

கரூர் புரசம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமிபிரியா 27. இவருக்கும் மாடுவிழுந்தான்பாறையை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே கடந்த 2 மாதங்களாக லட்சுமிபிரியா, முருகானந்தத்துடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம், லட்சுமிப்பிரியாவை, காலால் உதைத்து, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.

News March 29, 2025

தர்பூசணியில் செயற்கை நிறமூட்டி?

image

கரூரில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தர்பூசணியில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக பரிசோதனை செய்தனர். எனவே பொதுமக்கள் தர்பூசணியை பார்த்து வாங்குவது நல்லது.

News March 29, 2025

கரூரில்  224 பேர் ஆப்சென்ட்

image

கரூர் மாவட்டத்தில் நேற்று 10ம் வகுப்பு பொது தேர்வு 59 மையங்களில் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தனி தேர்வர்கள் என மொத்தம் 12,590 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று நடைபெற்ற தமிழ் பொது தேர்வில் 253 மாணவர் மாணவர்கள் மற்றும் 21 தனி தேர்வர்கள் என மொத்தம் 274 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News March 28, 2025

பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, சி.புதூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (20). இவர் தனது பைக்கில் ராஜரத்தினம் என்பவரை பின்னால் அமர வைத்து கொண்டு கடந்த 26 ஆம் தேதி புன்னம் சத்திரம் அருகே சென்றுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளவரசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2025

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 

image

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, வி.செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 30ல் தொடங்குகிறது. இலவச புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்தின்படி வழங்கப்படுகிறது. இலவச டெஸ்ட் பேட்ஜ் வசதியுடன் தினசரி மற்றும் வீக்எண்ட் வகுப்புகள் நடக்கிறது. இதில், கலந்து கொள்ள விரும்புவோர், 81481 92175 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உடனே ஷேர் செய்யுங்கள். 

News March 28, 2025

விடுதியில் சேர ஏப்.6 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில், 2025ம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான தேர்வு போட்டி வரும் ஏப்ரல் 8 ம் தேதி நடக்கிறது. இதில், சேர்வதற்காக, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 6 தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 17 வயது நிரம்பிய பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!