Karur

News October 10, 2024

கரூர்: ஒன்பதாம் வகுப்பு மாணவன் சாதனை

image

கரூர் குமரன் உயர் நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவன் திவ்யேஷ் என்பவர் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட ஸஃபி மல்யுத்தம் மாநில போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 13 முதல் 16ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய ஸஃபி மல்யுத்தம் போட்டியில் தமிழக அணியின் சார்பாக கலந்து கொள்கிறார்.

News October 9, 2024

கரூரில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

image

கரூர்: பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த (04.09.24) அன்று பதிவான கொலை வழக்கில் தொடர்புடைய வீரமலை என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வீரமலையை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

News October 9, 2024

கத்தியை காட்டி பணம் பறிப்பு: பெண்கள் கைது

image

கரூர் உழவர் சந்தை பகுதியில் சிவக்குமார் (34) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் அருகே ராயனுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நகுலேஷ்வரி (30), கனிஷ்டா ராணி (44), சேலத்தை சேர்ந்த சந்திரமோகன் (31) ஆகியோர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1,100 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகார்படி கரூர் டவுன் போலீசார் விசாரித்து, நகுலேஷ்வரி உள்பட 3 பேரை நேற்று கைது செய்தனர்.

News October 9, 2024

கரூர் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

கரூரில் வேளாண் விவசாயிகளுக்கு உட்கட்டமைப்பு நிதித்திட்டம் குறித்து https://agriinfra.dac.gov.in என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ddab.karur1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்). கரூர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 9, 2024

கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து,வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் 19.10.2024 அன்று காலை 8 மணி முதல் மாலை 3.00 மணி வரை, தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

News October 8, 2024

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

image

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாளை ( 9/10/24) காலை 10.30 மணி அளவில் ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக பங்கேற்கலாம். மேலும் தகவல்களுக்கு 04324-294335,7339057073 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

கரூரில் பேச்சுபோட்டி அறிவிப்பு

image

கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024 – ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு 17.10.2024 அன்று கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 04324 – 255077 ஐ தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

கரூர் உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விபரங்கள்

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை: தக்காளி ரூ.50 வெங்காயம் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.45, இஞ்சி ரூ.160, கத்தரிக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.30, சுரக்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.15, பச்ச அவரை ரூ.120, பரங்கிக்காய் ரூ.20, மாங்காய் ரூ.80, புடலங்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.15, கருவேப்பிலை ரூ.50, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.60 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

News October 7, 2024

கொங்குமண்டலம் செந்தில் பாலாஜி CONTROL?

image

ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு முன் கோவை, கரூர் அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பின் கோவைக்கு முத்துசாமி பொறுப்பு அமைச்சரானார். தற்போது செந்தில் பாலாஜி அமைச்சரான நிலையில், அவர் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொங்கு மண்டலத்தை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 7, 2024

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, 01.01.20-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 01.01.20 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.24 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெயர்களை பதிவு செய்ய நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.