India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூரில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் கூடுதல் விபரங்கள் பெற்றிட நேஷனல் (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (National Scholarship portal)லில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.
கரூரில் தீபாவளி பண்டிகை அன்று மருத்துவமனை, கோயில்கள், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை, மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்பு முகாம் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் அக்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், நடைபெற உள்ள இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. எனவே வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.24 அன்று முற்பகல் 11மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்துவருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தற்காப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் கனமழைக்கான திட்டமிடல், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கரூரில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் அக்.19ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டார வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கரூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் சம்பந்தமாகவோ அல்லது சேதமடைந்த மின்கம்பங்கள், மின்கம்பி அறுந்து கிடப்பது உள்ளிட்ட தகவல்களை தங்களது பகுதிகளில் உள்ள கோட்ட அலுவலர்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு மேற்பார்வை பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும், கீழ்காணும் தற்காப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்லவும், மேலும் நீர்நிலைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077, 04324-256306 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் (TN Alert) செயலியின் மூலம், பொதுமக்கள் வானிலை அறிக்கைகளை தெரிந்து கொள்ளலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க, தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசாருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட பட்டியல் சாதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 7ஆம் தேதி மனு அளித்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.