Karur

News November 28, 2024

தானியங்கி பம்புசெட் மானியத்தில் வாங்க கலெக்டர் அழைப்பு

image

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை மூலம் மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் மற்றும் குளித்தலை உபகோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளரை 9443404531 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

News November 28, 2024

கரூர்: பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

கரூர் மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்யலாம். இதில், ஹெக்டருக்கு பிரீமியத் தொகையாக தக்காளிக்கு ரூ.1,768, வெங்காயத்திற்கு ரூ.2,060, மிளகாய்க்கு ரூ.1,220 என பிரீமியம் தொகையை வரும் 2025 ஜனவரி 31க்குள்ளும், வாழைக்கு ரூ.3,460, மரவள்ளிக்கு ரூ.4,082  பிப்.28க்குள் செலுத்த வேண்டும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 28, 2024

கரூரில் நாளை மறுநாள் முதல் ‘க்யூ-ஆர்’ கோடு மூலம் மது விற்பனை

image

கரூர் மாவட்டத்தில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், கரூரில், ‘க்யூ- ஆர்’ கோடு மூலம் மது விற்பனை முறை, நாளை மறுநாள் முதல் தொடங்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ( நவ.,30) டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில், 87 டாஸ்மாக் கடைகளுக்கு, இரண்டு நாட்களாக, ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

News November 28, 2024

கரூரில் நாளை மறுநாள் முதல் ‘க்யூ-ஆர்’ கோடு மூலம் மது விற்பனை

image

கரூர் மாவட்டத்தில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், கரூரில், ‘க்யூ- ஆர்’ கோடு மூலம் மது விற்பனை முறை, நாளை மறுநாள் முதல் தொடங்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ( நவ.,30) டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில், 87 டாஸ்மாக் கடைகளுக்கு, இரண்டு நாட்களாக, ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

News November 28, 2024

தானியங்கி பம்புசெட் மானியத்தில் வாங்க கலெக்டர் அழைப்பு

image

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை மூலம் மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் மற்றும் குளித்தலை உபகோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளரை 9443404531 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

News November 28, 2024

குறைந்த வாடகையில் ‘ட்ரோன்’ கரூர் கலெக்டர் தகவல்

image

வயல்களுக்கு மருந்து தெளிப்பதற்காக, இரு ட்ரோன்கள் குறைந்த வாடகையில் கிடைக்கிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். வடசேரி பஞ்சாயத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று நடந்தது. விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் குறைந்த வாடகையிலும், வயல்களுக்கு மருந்து தெளிப்பதற்காக 2 ட்ரோன்கள் குறைந்த வாடகையில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய மகசூலை அதிகப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

News November 28, 2024

கரூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம் அணை அதன் முழுகொள்ளளவை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கரூர் மாவட்ட ஆற்றோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழையா கமெண்ட் பண்ணுங்க.

News November 27, 2024

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் பணியிடங்களை பாதுகாத்திட பலமுறை கோரிக்கையாக வலியுறுத்தியும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News November 27, 2024

கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருகின்ற 29.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11 மணி அளவில் நடைபெற உள்ளது. மேலும் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 27, 2024

கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

image

மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்து ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 28ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்குகொள்ளுமாறு கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் அமுதா கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!