India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பவுத்திரம் ஊராட்சி கந்தம்பாளையத்தைச் சேர்ந்த கலிங்கதுரை மனைவி இயேசு ரத்தினம் (62). இவர் வீட்டில் இருந்த மின்சார வயரில் கை வைத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் ரத்தினத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து க.பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு கரையை கடந்து, தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழையா? கமெண்ட் பண்ணுங்க.

1.கரூர் மாவட்டத்தில் இன்று அமாவாசையை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
2.கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
3.புகலூர் பள்ளி மைதானத்தில் திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி
4.கரூர் மாவட்டத்தில் 14.60 மி.மீ மழைப்பதிவு
5.கரூரில் கிடுகிடுவென பூக்கள் விலை உயர்வு
6.மாயனூர் கதவணைக்கு1,257 கன நீர் வரத்து

கரூர், நொய்யல் பகுதியில் விளைச்சல் குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.800க்கு விற்றது, தற்போது ரூ.1,500க்கும், சம்பங்கி ரூ.50-ரூ.120க்கும், அரளி ரூ.120-ரூ.180க்கும், ரோஜா ரூ.200-ரூ.220க்கும், பச்சை முல்லை ரூ.700-ரூ.1,000க்கும், வெள்ளை முல்லை ரூ.500-ரூ.1,200க்கும், கனகாம்பரம் ரூ.600க்கு விற்றது தற்போது ரூ.1,100க்கும் விற்பனையானது.

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவெடுத்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதவிர கரூர் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஊரில் மழையா கமெண்ட் பண்ணுங்க.

1.கரூரில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
2.கரூர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
3.எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கை ரத்து செய்ய மறுப்பு
4.கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
5.சிவ ஸ்தோத்திரம் பாடி தியானம் செய்த ரஷ்யர்கள்

கரூரில் தேர்தல் நடத்தல் விதிமீறலை வீடியோ எடுத்த தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய முன்னாள் அமைச்சர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. எனவே இன்று தேர்தல் அதிகாரியை மிரட்டிய வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது.

TAMILNADU AMATEUR BODY BUILDING அசோஸியேஷன் கரூர் மாவட்டத்தில் வருகின்ற 15.12.2024 அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஜி ஆர் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பாடி பில்டர்ஸ் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிக்கை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு உண்டு என்று கூறியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
2.தானியங்கி பம்புசெட் மானியத்தில் வாங்க கலெக்டர் அழைப்பு
3.கரூரில் நாளை மறுநாள் முதல் ‘க்யூ-ஆர்’ கோடு மூலம் மது விற்பனை
4.குறைந்த வாடகையில் ‘ட்ரோன்’ கரூர் கலெக்டர் தகவல்
5.பணம் வைத்து சூதாடிய 40 பேர் கைது
Sorry, no posts matched your criteria.