India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் மேல்நங்கவரம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (31), நேற்று தனது வாழைத் தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது அவரின் கணவர் பெரியசாமி யாரை பார்க்க சென்றாய் என கேட்டு அவரை தாக்கியுள்ளார். வயிற்றில் மிதித்து, தலைமுடியை பிடித்து தாக்கியதால், அனிதா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பெரியசாமி மீது நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வேளாண், தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்கள் தொடங்க விரும்பும் முன்வருவோருக்கு, ரூ.10 முதல் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என கரூர் கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் நிறுவனம் அல்லது ஸ்டார்ட்அப் இந்தியாவின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8220915157, 9942286337 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பிள்ளபாளையத்தைச் சேர்ந்த திலக் (25) மற்றும் லாலாபேட்டையைச் சேர்ந்த பிருந்தா (19) காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காரணமாக, பிருந்தாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். பாதுகாப்பிற்காக திலக், பிருந்தா இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அணுகி, கட்சி அலுவலகத்தில் திருமணம் நடந்தது. பின்னர் பாதுகாப்பு கேட்டு கரூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர்.

கரூர் மக்களே தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கானது. இந்நாளில் கோபப்படுவது, சண்டையிடுவது தவிர்க்கவேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு தான் பூஜைகள் செய்ய வேண்டும். அழுக்கு அல்லது அலட்சியம் உண்டானால் நன்மை கிடைக்காது என்பது ஐதீகம்; மேலும் இரவில் தீபம், விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளிர வைக்க வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் இருட்டாக வைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் சார்பாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். இப்பயிற்சி 90 நாட்கள் நடக்கும். மேலும் இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.

கரூர் மாவட்டத்தில், நவம்பர் மாதத்துக்கான ரேஷன் அரிசியை தற்போது (அக்டோபர் மாதத்தில்) பெறலாம் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுவினியோக திட்ட அட்டையாளர் குடும்பங்கள் சிரமம் அடையாத வகையில் அரிசியை இம்மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத அரிசியை பெற்றிருந்தாலும், பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீட்டை இம்மாதமே பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டல் அலகுகளை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதற்காக 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ஒரு கோடி ரூபாய் இலக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த மானியத்தைப் பெற 9489508735, 9500416678, 9942286337 அழைக்கவும்.

சின்னதாராபுரம் அமராவதி ஆற்று பாலத்தில் கீழ், மேகலா என்பவர் துணிகளை துவைத்து கொண்டு குளிக்க சென்றுள்ளார். இவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பிறகு தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.