Karur

News May 11, 2024

பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 44 லட்சம்

image

கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் உண்டியல்கள் என்னும் பணி நேற்று திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், பக்தர்களின் காணிக்கை யாக ரூ. 44 லட்சத்து 75 ஆயிரத்து 291 போடப்பட்டிருந்தது.
மேலும், தங்கம் 106 கிராம், வெள்ளி 655 கிராம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன என தெரிவித்தனர்

News May 10, 2024

கரூர் 16ஆம் இடம் !

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.58% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.69 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று கரூர் மாவட்டம் 16ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

13 ஆவது இடம் பிடித்த கரூர்

image

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 11366 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 10638 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 93.59 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13 வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் மாநில அளவில் 20 ஆவது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: கரூரில் 93.59 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 93.59 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 91.38 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.76 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

அரவக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளம் கலை பாடப்பிரிவுக்கான பிஏ தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் ஆகிய இளம் கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வருகிற 20ம் தேதி மாலை வரை இணையதளம் வாயிலாகவோ பதிவுசெய்யலாம் அல்லது கல்லூரியில் சேர்க்கை உதவி மையத்தை அணுகி விண்ணப்பங்களை பதிவுசெய்யலாம் என முதல்வர் வசந்தி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(மே 9) ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

மேம்பாலம் அடியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

கரூர் அமராவதி ஆற்றின் மேம்பாலம் அடியில் மூன்று நாட்களான 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற பசுபதி பாளையம் போலீசார் அடையாளம் தெரியாத உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்தும், இறப்பிற்கான காரணம் குறித்தும் பசுபதிபாளையம் போலீசார் நேற்றுமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 8, 2024

குடிநீர் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்

image

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா கா பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பணிகளை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் காவிரி குடிநீர் வினியோகம் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவிரியில் இருந்து சேமிக்கப்படும் குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யும் குடிநீர் தொட்டி வரை ஆய்வு செய்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உடன் இருந்தார்.

News May 8, 2024

கரூர் ஆட்சியர் அழைப்பு

image

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஆட்சியர், பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கு ‘கல்லுாரி கனவு’ என்ற நிகழ்ச்சி மே 13ல் கரூர் -கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம் என்றார்.

News May 8, 2024

கரூர் வறட்சி மாவட்டமாக மாறியது

image

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்றதால் வறட்சியின் கோர தாண்டவத்தால் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். காவிரி மற்றும் அமராவதி, நொய்யல், குடகனாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் கை கொடுக்காததால் இன்று கரூர் மாநகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

error: Content is protected !!