India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர், ஆண்டான் கோவில் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அஸ்வின்(11), விஷ்ணு(12), மாரிமுத்து(11). நண்பர்களான மூவரும் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இன்று(மே 14) நீச்சல் பழக சென்ற நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மூவரையும் சடலமாக மீட்டனர். கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கும் நிலையில், 3 சிறுவர்களின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை கரூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை கரூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தூளிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லு மகள் தமிழரசி என்கிற மனிஷா (19). இவர் மணப்பாறை நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நல்லு பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.
கரூர், புலியூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் (54). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் வீரராக்கியம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் முத்தமிழ் செல்வன் படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கே.பேட்டை பகுதியில் பொது இடத்தில் நிலத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே முன் விரோதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இருதரப்பிலும் சண்டை போட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சச்சரவு செய்த இரு தரப்பைச் சேர்ந்த பாரதி, சுமதி, ரஞ்சித், ரமேஷ், கீதா ஆகிய 5 பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
புகளூர் டிஎன்பிஎல் காகித ஆலை ஊழியர் திருச்சி சேர்ந்த கருப்பண்ணன் (51) இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்று விட்டு மதியம் வீட்டில் வந்து சாப்பிட்டு பணிக்குச் செல்ல பைக்கை எடுத்தபோது கடும் வெயிலால் கருப்பண்ணன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
கரூர் ரயில்வே போலீசார் சார்பில் கரூர் ரயில் நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் தடுப்பு, ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கரூர் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு துண்டறிக்கையை ரயில் பயணிகளுக்கு வழங்கினர்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமிகள் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எல்லா வகையான பயிற்சி, சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்க்குமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.