India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்திற்கு இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை புரிந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயதீர்வு அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார். இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இன்று கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம், மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1, வேலுச்சாமிபுரம் பகுதியில், புதிய முழு நேர நியாய விலை கடையை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மேயர் கவிதா கணேஷ், துணை மேயர் தரணி சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மோகனூர்-வாங்கல் சாலை முதல் வெங்கமேடு-காமதேனு நகர் வழியாக சேலம் பழைய நெடுஞ்சாலை வரை இணைக்கும் வகையில், ரூ.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலையை தமிழ்நாடு மின்சார துறை, ஆயத்தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கரூர் ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரக பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே கையால் அகற்றுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பல்ராம் சிங் என்ற நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் 15 தினங்களுக்குள் அப்படி யாராவது மனிதக் கழிவுகளை கையால் எடுத்தால் உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.

1.மாண்டலின் ராஜேஷ் கரூரில் சுவாமி தரிசனம்
2.குளித்தலையில் ஒரு மணி நேரம் பலத்த கனமழை
3.அமைச்சர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி: ஆய்வு செய்த எம்எல்ஏ
4.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
5.வட்டாட்சியரகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதிஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை துறை செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

க.பரமத்தி வடக்கு ஒன்றியம் குப்பம் ஊராட்சியில் பொதுமக்களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து மனுக்களை பெற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்பகுதியில் உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு மின்சார துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை (28/12/2024) காலை 7 மணி முதல் காலை 10:45 மணி வரை கரூர் மாவட்டத்தில் வாங்கல், சனப்பிரட்டி, காளியப்பனூர், திருமாநிலையூர், மக்கள் பாதை, தென்றல் நகர், கோதூர், கோவிந்தம் பாளையம், ஆத்தூர் பகுதிகளில் பல்வேறு புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு கரூர் எம்பி ஜோதிமணி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மன்மோகன் சிங் நவீன இந்தியாவின் பொருளாதாரச் சிற்பியாகவும், சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். 1991ஆம் ஆண்டு மன்மோகன் சிங் கொண்டு வந்த திட்டத்தின் மூலம் இந்திய பொருளாதாரம் வலிமை அடைந்தது. இந்த துயரமான நேரத்தில் மன்மோகன்சிங் குடும்பத்தாருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கரூர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் – கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்டன நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என என கரூர் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.