Karur

News January 8, 2025

கரூரில் விளையாட்டு போட்டிகள் ஆட்சியர் அழைப்பு

image

கரூரில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்குபெறும் வகையில் 8 பிரிவுகளில் கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது அதில் சிறந்த படைப்பைப் படைத்த படைப்பாளிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பாராட்டி, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கவுள்ளார். மேலும்
(tndiprmhpongal2025@gmail.com) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 8, 2025

நீர்நிலை விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழலையும் சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஆதாரமாக நீர்நிலை உள்ளது. நீர் நிலையைப் பாதுகாக்கும் எண்ணம் விதைத்திட “நீர்நிலைக்காவலர்” விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் awards.tn.gov.in என்ற web மூலம் விண்ணப்பிக்கலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்!

image

கரூரில் வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 03.01.2025 மற்றும் 10.01.2025 நியாயவிலைக் கடைகள் செயல்படும். இப்பணி குறித்த புகார்கள் ஏதுமிருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 7, 2025

திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

கரூரில் மாவட்டத்தில் தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறிய திருநங்கைகளுக்கான 2024-2025க்கான திருநங்கைகள் விருது வரும் ஏப்.15 அன்று வழங்கப்படும். தகுதி வாய்ந்த திருநங்கைகள் 10.02.25க்குள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு கரூர் சமூகநல அலுவலகம் (04324 255009) எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

கரூரின் தங்க மங்கையை வாழ்த்திய செந்தில்பாலாஜி

image

ஹைதராபாத்தில் நடைபெற்ற 49வது தேசிய அளவிலான போட்டியில் கரூரைச் சேர்ந்த மாணவி மோனிகா தமிழ்நாடுஅணிக்காக கலந்து கொண்டு விளையாடினார். இந்தபோட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கப்பதக்கம் வென்ற அணியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய மாணவி மோனிகாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்தினார்.

News January 7, 2025

திமுக சார்பில் ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முப்பெருந்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு சட்டப் பேரவை உரையினையும் தமிழ்த்தாய் வாழ்த்தினையும் அவமதிப்பு செய்ததாக தமிழக ஆளுநரைக் கண்டித்து, இன்று காலை 10 மணியளவில் தலைமை தபால் நிலையம் முன்பாக கரூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News January 7, 2025

ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

image

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா & காவிரி இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இப்போட்டிகளில் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் நூலக வாசகர்களுக்கு இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

News January 7, 2025

கரூரின் தங்க மங்கையை வாழ்த்திய செந்தில்பாலாஜி

image

ஹைதராபாத்தில் நடைபெற்ற 49வது தேசிய அளவிலான போட்டியில் கரூரைச் சேர்ந்த மாணவி மோனிகா தமிழ்நாடுஅணிக்காக கலந்து கொண்டு விளையாடினார். இந்தபோட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கப்பதக்கம் வென்ற அணியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய மாணவி மோனிகாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்தினார்.

News January 7, 2025

கரூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

கரூர் சேகருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சின்ன நாயக்கன்பட்டி பிரிவு அருகே டிசம்பர் 4ம் தேதி வந்தபோது கரூர் வெங்ககல்பட்டி ராஜா மற்றும் சிலர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரை மிரட்டி பணம் பறித்தனர். வெள்ளியணை காவல் நிலையத்தில் ராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் சில வழக்குகள் இவர் மீது உள்ளதால் நேற்று இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News January 7, 2025

மாயனூர் கதவணைக்கு 11612 கன அடி நீர்வரத்து

image

மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 11,612 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 11,352 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 200 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 150 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 150 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!