India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் மத்திய மாநில் அரசுகளிடம் உதவித்தொகை பெறும் மாணவ, மாணவிகளின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பயன்படுத்திய மர்மநபர்கள் சிலர் அதிகாரிகள் என மாணவ, மாணவிகளை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, அவர்கள் அனுப்பும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய சொல்லி பணத்தை பறித்துள்ளனர். இந்நிலையில், உதவித்தொகை சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரியும் போனில் தொடர்பு கொள்ளமாட்டார்கள் என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
கரூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திட, குடிநீர் பிரச்சனைகள், நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப் திட்டத்தை மீண்டும் கொண்டுவர இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கரூர், மண்மங்கலம் அடுத்து தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியல் கல்லூரியில் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தோகைமலை அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழாவிற்கு பல மாவட்டங்களில் இருந்து 14 மந்தையர்கள் கலந்து கொண்டனர். எல்லை கோட்டை நோக்கி சுமார் 200 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில், திருச்சி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கோலக்கம்பிலி நாயக்கர் மந்தை சின்னக்காரி குழு மாடு முதலாவதாக ஓடி வந்து முதல் இடத்தை பிடித்தது. இதற்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை குழு காவல்காரன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காவல்காரன்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், வாழப்பாடி வட்டம், குள்ளம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் ரூ.71,000 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. ஆவணங்களின்றி கொண்டு வந்த, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஒத்தப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பலாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது. தனி நபர் ஒருவரால் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் அடிப்படையில் முற்றிலும் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி பேனர் வைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடவூர் ஒன்றியம் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மணப்பாறை மைலம்பட்டி பிரதான சாலை, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக கடவூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை அடைந்தது.
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, புன்னம் சத்திரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது, “வரும் தேர்தலில், ஜோதிமணியை மீண்டும் வெற்றி பெற வைத்து, ஏமாந்து விட வேண்டாம். ஜோதிமணிக்கு போடும் ஓட்டு, நோட்டாவுக்கு போடுவதற்கு சமம்” என கடுமையாக தாக்கி பேசினார்.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா தொண்டமாங்கினம் அடுத்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பழனியம்மாள் (36). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மதுவிற்ற பழனியம்மாள் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ஏழு மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் வெங்கமேடைச் சேர்ந்தவர் சூசை கண்ணு(68). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கேஸ் அடுப்பில் உணவு சமைத்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.