Karur

News January 12, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு கரூர் கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் ஆர்டிஓ தலைமையில் மாதம் ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் 2வது செவ்வாய்க்கிழமை குளித்தலை சப் கலெக்டர் அலுவலகத்திலும், மாதத்தில் 4ஆம் புதன்கிழமை கரூர் ஆடிஓ அலுவலகத்திலும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் 22ஆம் தேதி கரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

பொங்கல்: கரூர் எஸ்பி எச்சரிக்கை

image

அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பகிரப்பட்டுவருகிறது. இவ்வாறு பொய்யான தகவல் பரப்புவோரின் மீதும் தடையை மீறி சேவல் சண்டை நடத்துபவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்கள்.

News January 11, 2025

3 லட்சம் மானியத்துடன் கலைஞர் கைவினைத்திட்டம் பதிவு

image

கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் மானியத்துடன் 3 லட்சம் கடன் பெறக்கூடிய 25க்கும் மேற்பட்ட வணிகத்திற்கு பஞ்சப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் இ சேவை மற்றும் பொது சேவை மையங்களில் பதிவு செய்து வருகின்றனர். மரவேலைப்பாடு, சிகை அலங்காரம், நகை, கட்டிட வேலை, சிற்பம், மண்பாண்ட வேலைகள், தையல் என 25-க்கும் மேற்பட்ட வணிகம் செய்வோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

News January 11, 2025

லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்: ஜோதிமணி எம்பி புகழஞ்சலி

image

லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினமான இன்று கரூர் எம்பி ஜோதிமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :சுதந்திரப் போராட்ட தியாகி ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்று முழங்கிய விவசாயிகளின் பிரதமர். எளிமை ,நேர்மையின் சின்னம். முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி எனக் குறிப்பிட்டுள்ளார்.

News January 11, 2025

கரூரில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

கரூர் கலெக்டர் தகவல்: படித்து முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து வேலையின்றி 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இளைஞர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் கீழ் பயன்பெற குறிப்பிட்ட கல்வித் தகுதிகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ச்சியாக பதிவை புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி உடையோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

News January 11, 2025

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தினை ஆட்சியர் ஆய்வு

image

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் இராசாண்டர் திருமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வில் காளை மாடு மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முறையான சோதனைகள் நடத்துவது குறித்து பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

News January 10, 2025

இரண்டு நாட்கள் மதுபான கடைகள் விடுமுறை

image

மாவட்டத்தில் எதிர்வரும் திருவள்ளுவர் தினம் 15.1.2025 மற்றும் குடியரசு தினம் 26.1.2025 ஆகியாகி தினங்களில் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து மதுக்கூடங்கள் உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் மீறி மதுபான விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட தலைவர் தங்கவேல் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .

News January 10, 2025

கண்வலிக்கிழங்கு : கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கண் வலி கிழங்கு விவசாயிகளுக்கு அறிவிப்பு : கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட கரூர், குளித்தலை, இரும்பூதிபட்டி, சின்னத்தாராபுரம் ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கண் வலி கிழங்கு விதைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

கரூர்: மாணவ,மாணவிகளுக்கான போட்டிகள்

image

கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் ஜன.21,22 ஆகிய நாட்களில் காலை 9.30 மணிக்கு தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் கூறியுள்ளார்.

News January 10, 2025

இன்று நியாய விலை கடை இருக்கும் 

image

கரூரில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில், “பொங்கல் பரிசுத்தொகுப்பை அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்” என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, 1 கரும்பு வழங்கப்படுகிறது.

error: Content is protected !!