Karur

News January 14, 2025

அதிமுக சார்பில் Ex அமைச்சர் பொங்கல் வாழ்த்து

image

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடன், உவகையுடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், நம் மக்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி, எனது அன்பிற்குரிய மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

News January 14, 2025

அமைச்சர் செந்தில்பாலாஜி பொங்கல் வாழ்த்து

image

கரூரில் தன்மானத் தமிழர் திருநாளாம், வருடம் முழுக்க தனக்கு ஈடு கொடுத்து உழைத்திடும் மாடுகளுக்கும், வாழ்நாள் முழுக்க சூடு கொடுத்து காத்திடும் உதயசூரியனுக்கும் நன்றி தெரிவிக்க தமிழர்களின் கொண்டாடும் தவத்திருநாளாம், செங்கரும்பாய் தித்திக்க, அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும், அனைவரின் இல்லங்களிலும் இன்பம் பெருகட்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.

News January 14, 2025

கரூரில் பொங்கல் விளையாட்டு போட்டி துவக்கம்

image

இன்று புகலூர் நகராட்சியில் திமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கி பிறகு விளையாட்டு போட்டியை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ துவக்கி வைத்து சிறப்பித்தார். உடன் நகர மன்ற தலைவர் குணசேகர், நகர மன்ற துணைத் தலைவர் நவாஸ்கான், மாமன்ற உறுப்பினர்கள், அவை தலைவர் வாங்கிலி, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 14, 2025

கரூர் காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆலோசகர் தேவை

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆலோசகருக்கான ஓராண்டு கால பணி நிறைவடைந்து விட்டதால் புதிதாக சட்ட வல்லுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் பணி விவரப் பட்டியலுடன் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நாளைக்குள் (15.01.2025) சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

News January 13, 2025

கரூரில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்வு

image

கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ. 2,200,முல்லைப் பூ ரூ.2,000,செவ்வந்திப்பூ ரூ.180, அரளிப்பூ ரூ.300,ரோஜாப்பூ ரூ.200, சம்பங்கி பூ ரூ.300, துளசி 4 கட்டு 60 , மருவு 4 கட்டு 120 என விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.பூக்கள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது.

News January 13, 2025

கரூருக்கு இப்படி ஒரு தெய்வீக வரலாறா?

image

கரூர் என்ற பெயர், தெய்வீக இசை திருவிழாவை பாடிய 9 பக்தர்களில் ஒருவரான கருவூர் தேவர் பெயரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். இந்து புராணங்களின்படி, பிரம்மா கரூரில்தான் தனது படைப்பின் வேலையைத் தொடங்கினார் என்றும், கரூர் “புனிதமான பசு இருக்கும் இடம்” என்று குறிப்பிடப்படுகிறது. முதலில் கோவை, பின்னர் திருச்சி மாவட்டமாக இருந்தது. 1995 செப்.30 அன்று, திருச்சியிலிருந்து கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

News January 13, 2025

மாயனூர் கதவணைக்கு 5359 கனஅடி நீர்வரத்து

image

மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 5359 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 400 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 250 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது.

News January 13, 2025

கரூரில் விசிக நிர்வாகி கைது: பரபரப்பு

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் திருச்சி மண்டல செயலாளர் ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில்,.இவரது கூட்டாளி கடவூர் இடையபட்டியைச் சார்ந்த கார்த்திகேயன் என்பவரை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வந்த நிலையில் வழிப்பறி வழக்கில் இன்று கரூர் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

News January 12, 2025

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம்

image

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாநில வழக்கறிஞர் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

News January 12, 2025

திருவள்ளுவர் மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள்

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மற்றும் முப்பெரும் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

error: Content is protected !!