Karur

News January 21, 2025

கரூரில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை வரை, அறவக்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதிகள், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, புலியூர், மேலப்பாளையம், வடகுபாளையம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 20, 2025

 மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம்

image

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 22ம்தேதி புதன் கிழமை அன்று மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க ஆதாரங்களுடன் விண்ணப்பங்களை நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

வாகன பிரச்சாரம் தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கரூர் உட்பட்ட கலெக்டர் வளாகம் முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சார கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வாகன பிரச்சாரம் கலை நிகழ்ச்சி பஸ் ஸ்டாண்ட், தான்தோன்றி மலை பள்ளி வளாகம் தொடர் பிரச்சாரத்தை செய்தனர். ஏற்பாடுகளை டமண்ட் டிரஸ்ட் கலைச்செல்வி டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News January 20, 2025

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் 

image

கரூர் மாவட்டம் மூக்கனாங்குறிச்சி ஊராட்சி கந்தசாரப்பட்டி ரேஷன் கடையில், பெரும்பாலானவர்கள் பொங்கல் பரிசு வாங்கவில்லை ‘இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் உள்ளீர்கள் வரும் காலங்களில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தகுதி இல்லாமல் போய்விடும்’ என, வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிடப்பட்டது. இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.

News January 19, 2025

கட்சி நிர்வாகி இல்ல விழாவில் அமைச்சர்

image

இன்று குளித்தலையில் கரூர் மாவட்ட திமுக கட்சி தொழிலாளர் அணித்தலைவரும் குளித்தலை நகர் மன்ற உறுப்பினருமான ஜெய்சங்கரின் இல்ல திருமண விழாவில் முப்பெரும் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News January 19, 2025

உறவினர்களிடையே தகராறு: 7 பேர் மீது வழக்குப்பதிவு

image

கடவூர் தாலுகா பள்ளி கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (26). அதே பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதியை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 16ஆம் தேதி தனது குழந்தையை பார்க்கச் சென்ற ராஜபாண்டியன் குடும்பத்தாரை, அருள்ஜோதியின் தந்தை மாணிக்கம் உள்ளிட்ட 7 பேர் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். சிந்தாமணிபட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 19, 2025

கரூரில் பொங்கல் பரிசு வாங்காத 58,565 பேர் 

image

கரூர் மாவட்டத்தில் மொத்தம், 637 ரேஷன் கடைகள் உள்ளன. 3,31, 513 கார்டுதாரர்கள் உள்ளனர். இதுவரை மொத்த பயனாளிகளில், 82.33 சதவீதம் பேர், அதாவது 2,72, 948 பேர் மட்டுமே பரிசு தொகுப்பு பெற்றிருந்தனர். இன்னும், 53,565 பேர் பரிசு தொகுப்பு பெறவில்லை. 50 சதவீதம் பேர் கூட வாங்காத கடைகளில், கையில் இருப்பு உள்ள பொங்கல் தொகுப்பை விநியோகம் செய்ய வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

News January 19, 2025

கரூர் மாவட்டத்தில் 23.80 மி.மீ. மழைப்பொழிவு

image

நேற்று கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கரூரில் 2.30 மி.மீ., அரவக்குறிச்சியில் 7 மி.மீ., க.பரமத்தியில் 2.30 மி.மீ., தோகைமலையில் 5 மி.மீ., பஞ்சபட்டியில் 3.60 மி.மீ., குளித்தலையில் 1.50 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் 23.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இத்தகவலை கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 18, 2025

சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்ட ஆலோசகர்களின் ஓராண்டு கால பணி நிறைவடைந்து விட்டதால் புதியதாக சட்ட வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே உடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் பணி விபரங்களுடன் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு 23.1.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இன்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News January 18, 2025

கரூரில் மாபெரும் பந்தயம்: செந்தில்பாலாஜி அழைப்பு

image

கரூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலிலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு காலனி பகுதியில் இருந்து வாங்கல் வரை மாபெரும் குதிரை எல்கை பந்தயம் நாளை மாலை 3 மணி அளவில் மின்சாரத்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற இருக்கின்றது. மேலும் போட்டியில் பங்கேற்போர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!