India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் 2024-25 ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முதன்மை மண்டல மேலாளர், மற்றும் முன்னோடி வங்கி மேலாளர், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர், பொது மேலாளர் , தொழில் மைய மாவட்ட தாட்கோ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து அபகரித்தாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர்.
கரூரில் போலியான ரயில்வே வேலை வாய்ப்புகளை நம்ப வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உண்மையான வேலை வாய்ப்புகள் ரயில்வே நிர்வாகம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். ரயில்வே தேர்வுகளுக்காக காத்திருப்பவர்களை குறிவைத்து போலியான பணி அழைப்புகள் அனுப்பப்படுகிறது. பொய்யான வாக்குறுதிகள், போலியான Offer Letters வழங்கி மோசடி செய்யும் நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரூர் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இன்று வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து அன்றைய தினம் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அந்த மையத்தின் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
கரூரில் 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவரை 2நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கரூர் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று அவரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் மீண்டும் ஆஜர்படுத்தினர். இதனிடையே, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களை மிரட்டி நிலத்தை வாங்கியதாக சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கின் விசாரணைக்கு 1நாள் அனுமதி வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
மக்களுடன் முதல்வர்” என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் 11.07.2024 முதல் 08.08.2024 வரை 46 இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது. நாளை அரவக்குறிச்சி வட்டாரத்திற்குட்பட்ட வேலம்பாடி , இனங்கனுார் , சாந்தப்பாடி மற்றும் பல ஊராட்சிகளில் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன் பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட கிராம ஊராட்சியில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு தூய்மையாக விளங்கும் கிராம ஊராட்சிகளில் ஜூலை 26 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறஉள்ளது . இன்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தகவல் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து இன்று காணொளி காட்சி வாயிலாக கருர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் கம்பிவட ஊர்தி சேவையை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் நன்றி தெரிவித்து பேசினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம், சிவகாமசுந்தரி, இருந்தனர்.
கரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்கள் மட்டும் கலந்து கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 6379527550, 04324 248816 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இதற்கு முன்பதிவு அவசியம்.
கரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்கள் மட்டும் கலந்து கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 6379527550, 04324 248816 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இதற்கு முன்பதிவு அவசியம்.
Sorry, no posts matched your criteria.