Karur

News January 25, 2025

கரூர் மக்களே! உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.

News January 25, 2025

மின்கம்பத்தில் நிலை தடுமாறி எலக்ட்ரீசியன் பலி

image

குளித்தலை அருகே வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகின்றார். இன்று மாலை நாவல் நாயக்கன்பட்டி கிராமத்தில் மின்தடை ஏற்பட்டதாக அங்கிருந்த மின் கம்பத்தில் ஏரி பழுது பார்த்துள்ளார். எதிர்பாராத விதமாக கம்பத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த ரத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பலியானார். தோகைமலை போலீசார் விசாரணைமேற்கொண்டனர்.

News January 25, 2025

தேசிய அளவில் கரூர் பள்ளி மாணவி தேர்வு

image

தேசிய அளவில் நடந்த வீர் கதா 4.0 போட்டியில் கரூர் மாவட்டம் குளித்தலை செயின்ட் டோமினிக் சேவியோ மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சத்யஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீர தீர செயல்களுக்கான கேலன்ட்ரி விருது பெற்ற மேஜர் சரவணன் பற்றிய கட்டுரை எழுதி தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தின விழா அணி வகுப்பில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

News January 25, 2025

அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம்

image

இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழ் மொழியை காக்க தங்கள் இன்னுயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்கள். உடன் எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News January 25, 2025

தேசிய அளவில் கரூர் பள்ளி மாணவி தேர்வு

image

தேசிய அளவில் நடந்த வீர் கதா 4.0 போட்டியில் கரூர் மாவட்டம் குளித்தலை செயின்ட் டோமினிக் சேவியோ மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சத்யஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீர தீர செயல்களுக்கான கேலன்ட்ரி விருது பெற்ற மேஜர் சரவணன் பற்றிய கட்டுரை எழுதி தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தின விழா அணி வகுப்பில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

News January 25, 2025

மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் வீர வணக்கம்

image

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தமிழ் என்பது வெறும் மொழியல்ல, நமது இனத்தின் அடையாளம்.அன்னைத் தமிழை காக்க, தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகத் தீச்சுடர்களுக்கு எனது வீர வணக்கங்கள். தமிழ் வாழ்க என தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

நிலக்கடலை சாகுபடி: பார்வையிட்ட வேளாண் விஞ்ஞானி

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி பூஞ்சோலைப்புதூர் கிராமத்தில் CFLD எண்ணெய் வித்து (நிலக்கடலை) பயிர் VRI 8 ரகம் பயிரிடப்பட்டுள்ளது. இதை புழுதேரி இந்திய வேளாண் அறிவியல் கழகம் விஞ்ஞானி திரவியம் நேற்று களப்பணியாளர்களுடன் பார்வையிட்டார். அவருடன் வேளாண் அறிவியல் கழகம் பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

News January 25, 2025

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் கூறிய Ex அமைச்சர்

image

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த நூற்றுக்கணக்கானோரின் வீரத்தை நினைவுகூரும் வகையில் இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களின் தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம் என கூறியுள்ளார்.

News January 25, 2025

கரூர்: ‘பெரிய ரவுடி’…  பட்டா கத்தியுடன் அச்சுறுத்திய 2 பேர்

image

குளித்தலை அருகே நச்சலூர் வஉசி நகர் பிள்ளையார் கோவில் அருகே பட்டாகத்தியுடன் பெரிய ரவுடி என கத்திக்கொண்டு இருவர் அச்சுறுத்தி வந்துள்ளனர். சுற்றி வளைத்த நங்கவரம் போலீசார் பட்டாகத்தியை பறிமுதல் செய்தனர். கட்டாணிமேட்டை சேர்ந்த நந்தபிரகாஷ் (25), நச்சலூர் தாட்கோ காலனியை சேர்ந்த சிசில்கான் (23) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

News January 25, 2025

கஞ்சா பொருட்களை விற்ற 4 பேர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேடு நான்கு ரோட்டில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன் (30), சரத்குமார் (22), மனோபாரதி (26), உதயநிதி (23) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!