Karur

News January 29, 2025

நாளை கரூரில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ. தலைமையில், மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களுடன் குறைதீர் கூட்டம் நாளை (30ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. இதில், நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் புகார்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.இதை தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 29, 2025

கரூர் மாவட்டத்திற்கு இரண்டாம் பரிசினை பெற்ற ஆட்சியர்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நுகர்வோர் பாதுகாப்பில் கரூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு, மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றதைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி முன்னிலையில் கேடயத்தினை, மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் இன்று வழங்கினார்கள். உடன் தலைமைச் செயலாளர் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News January 29, 2025

கரூர் மக்களின் கனவு நனவாகுமா?

image

கரூர் வழியாக இரவு நேரத்தில் மட்டும், சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள், பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல சேலம், ஈரோடு, திருச்சி போக வேண்டிய நிலை உள்ளது. இதனால், கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் பிப்., 1ல் மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகுமா?

News January 29, 2025

கரூரில் இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

image

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், திட்ட செயலாக்கம் சார்பில் இளம் வல்லுனர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தரவு அறிவியல், புள்ளியியல் படிப்பில் இளங்கலை பட்டம் உள்பட இதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் மாதம், 50,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும், 31க்குள் விண்ணப்பிக்கவும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News January 29, 2025

கரூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: (கிலோ ஒன்றுக்கு) தக்காளி ரூ.20 – 24, உருளைக்கிழங்கு ரூ.45- 50, சி.வெங்காயம் ரூ.50- 60, பெ.வெங்காயம் ரூ.45- 50, பச்சை மிளகாய் ரூ.35-40, கத்தரிக்காய் ரூ.25- 30, வெண்டைக்காய் ரூ.45 – 50, பீன்ஸ் ரூ.65-70, அவரை ரூ.50 – 60, கேரட் ரூ.65 – 70, பீட்ரூட் ரூ.55 – 60, தேங்காய் ஒரு காய் ரூ.55 – 65 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

News January 29, 2025

கரூரில் அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்

image

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும் போது தமிழ்நாடு முழுவதும்100 அமுதம் அங்காடிகள் சீரமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1500 வரை சேமிப்பு ஏற்படும் என்று தகவல் அளித்துள்ளார்.

News January 29, 2025

காச நோயாளிகளின் ஊட்டச்சத்து ஆதரவு தொகை உயர்வு

image

கரூர் மாவட்டத்தில் 100 நாட்கள் காசநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் நிக் ஷய் திட்டத்தின் கீழ் காசநோய் நோயாளிகளுக்கான மாதாந்திர ஊட்டச்சத்து ஆதரவு ரூ.500 -லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊட்டச்சத்து ஆதரவு கரூர் மாவட்டத்தில் உள்ள காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

News January 28, 2025

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தில், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலமாக, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத்தில், தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான டெக்ஸ்டைல்ஸ், அக்ரோ ஜியோ மொபைல் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் மண்டல துணை இயக்குனர் தான்தோன்றிமலை முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் (04324 298588) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News January 28, 2025

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.28) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.20, கத்தரி ரூ.25, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.15, வெண்டை ரூ.40, பச்சை அவரை ரூ.50, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.55, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.40, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.90-க்கு விற்பனை ஆகிறது.

News January 28, 2025

கரூரில் நாளை இரு அமைச்சர்களின் நிகழ்ச்சிகள்

image

நாளை (28.01.2025) காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, முத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளனர். மதியம் 12.30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் சிவாயம் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்கள்.

error: Content is protected !!