Karur

News July 13, 2024

பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

image

கரூர் பிரியாணி கடை அதிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக விக்னேஷ் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.இவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.மேலும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான 4 நாள் விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

News July 13, 2024

மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளை ஆய்வு

image

கரூர் மாவட்டம் அரசு காலணி வாங்கல் சாலையில் அமைந்துள்ள குப்பை உரக்கிடங்கு மையத்தில், மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் விட்டு, அதனை பராமரிக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் கவிதா கணேஷ் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் நகராட்சி நல அலுவலர், செயற் பொறியாளர், நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News July 12, 2024

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

News July 12, 2024

கரூரில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

கரூர் மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) கரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

கூட்டுறவுத்துறை பணியாளர் நாள் கூட்டம்

image

கரூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைப்படி இரு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பணியாளர்கள் அனைவருக்கும் பணியாளர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் கரூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கூட்டுறவு பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 11, 2024

கரூர் மாவட்டத்தில் வெப்ப நிலை நிலவரம்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்து சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவினாலும் சில இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.அந்த வகையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,கரூர் மாவட்டத்தில் உள்ள பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதியிலும் கடும் வெயிலால் மக்கள் அவதியுற்றனர்.

News July 11, 2024

முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு

image

கரூா் ஆண்டாங்கோவில் பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான கவின் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கரூா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 10, 2024

கரூர் போலீசார் சவுக்கு சங்கரிடம் விசாரணை

image

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (43).கரூர் டவுன் காவல் நிலையத்தில்,சென்னையை சேர்ந்த விக்னேஷ் 7 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரில் கைது செய்யப்பட விக்னேஷ்,சவுக்கு சங்கரின் இணையதளத்தில் வேலை பார்த்ததாகவும்,கிருஷ்ணனிடம் வாங்கிய பணத்தை சங்கரிடம் கொடுத்ததாக கூறினார்.நேற்று சவுக்கு சங்கரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.போலீசார் நான்கு நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது

News July 7, 2024

M.R.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை: போலீசார் குவிப்பு

image

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், அவருக்கு சொந்தமான வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் சிபிசிஜடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சோதனையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!